Thaipusam 2024: கரூர் தான்தோன்றிமலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
தைப்பூசத்தை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதியில் வழியாக வலம் வந்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு தான்தோன்றி மலை சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் அபிஷேகங்கள் பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, தீர்த்த காவடியினர் விரதம் இருந்து நேர்த்திக்கடனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் தான்தோன்றி மலை பகுதியில் குடிக்கொண்டு அருள் பாலித்து வரும் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து ஏராளமான பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதியில் வழியாக வலம் வந்தனர்.
தாரை தப்பட்டைகள் முழங்க நடைபெற்ற பக்தர்கள் பால்குட திருவீதி உலா தாந்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயம் வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. அதன் தொடர்ச்சியாக மூலவர் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு பக்தர்கள் வழங்கிய பாலால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மகா தீபாராதனை நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு தான்தோன்றிமலை அருள்மிகு ஸ்ரீ ஆறுமுக சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பாலாபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.