மேலும் அறிய
Advertisement
வேளாங்கண்ணியில் பொதுமக்களை கவர்ந்த கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் பேரணி
கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் பேரணி சுற்றுலா பயணிகள், யாத்திரிகர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் தாத்தாகளின் பேரணி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் இணைந்து பேரணியில் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம் உலகப் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிறிஸ்துமஸ் தாத்தாகளின் பேரணி இன்று நடைபெற்றது. வேளாங்கண்ணி விடியற்காலை வின் மீள் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை பேராலய அதிபர் இருதயராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள், பெண்கள் கிறிஸ்மஸ் தாத்தா வேடமிட்டு கிறிஸ்மஸ் வாழ்த்து பாடல்களுக்கு ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் வேளாங்கண்ணி நகரில் ஊர்வலமாக வந்தனர்.
பேருந்து நிலையம், கடைவீதி வழியாக வேளாங்கண்ணி மாதா பேராலய முகப்பில் நிறைவு பெற்றது. பேரணி சுற்றுலா பயணிகள், யாத்திரிகர்கள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ், உதவி பங்குத்தந்தை பரிசுத்தம், கன்னியாஸ்திரிகள் பங்கு மக்கள் என நூற்றுக்கணக்கானோர் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வேளாங்கண்ணி பேராலயம் மட்டுமல்லாமல் வேளாங்கண்ணி பேரூராட்சியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion