மேலும் அறிய

Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

Sabarimala Temple: இனி வரும் காலங்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்திற்கு அனு மதிக்கப்படுவார்கள். உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படும்.

கேரள மாநிலம் சபரிமலைக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இதனால் அங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய வரும் முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமானோர் இந்த முன்பதிவை பயன்படுத்தி வந்தனர். 

இதற்கிடையில் சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவும் செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த 2 முறைகளால் கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் காணப்பட்டது. இதனால் தரிசனத்திற்கு பக்தர்கள் சுமார் 15 மணி நேரம் வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நிலவியது. இதுகுறித்து கேரள ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.


Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வது தொடர்பாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தலைவர் பிரசாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கடந்த சீசனில் உடனடி முன்பதிவு மூலம் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டனர். இதனால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது வெளியான தகவல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் உடனடி தரிசன முன்பதிவு முறையை ரத்து செய்ய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இனி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சீசன் காலங்களில் ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பக்தர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட 10 இடங்களில் செயல்பட்டு வந்த உடனடி முன்பதிவு கவுண்டர்கள் விரைவில் மூடப்படுகிறது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு 3 மாதங்களுக்கு முன்னதாகவே ஆன்லைன் முன்பதிவு வசதி ஏற்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே முன்பதிவை உறுதி செய்து கொள்ளலாம்.

கூட்டம் முடிந்ததும் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சபரிமலையில் இனி வரும் காலங்களில் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே தரிசனத்திற்கு அனு மதிக்கப்படுவார்கள். உடனடி தரிசன முன்பதிவு முறை ரத்து செய்யப்படும். பம்பை முதல் சன்னிதானம் வரை ரோப்கார் அமைப்பது குறித்து ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் அறிக்கை வருகிற 23-ந் தேதி ஐகோர்ட்டில் சமர்பிக்கப்படும். கோர்ட்டு அனுமதி கிடைத்ததும் ரோப் கார் பணிகள் தொடங்கப்படும். முதல் கட்டமாக அப்பம், அரவணைக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும்,அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் சேவைக்கும் ரோப் கார் பயன்படுத்தப்படும் தேவஸ்தான தலைவர் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தலைப்பு செய்திகள்

சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
அறிவியல், ஆன்மீகத்தில் வியக்கத்தக்க கலவை... சிதம்பரத்தின் ரகசியம்
அறிவியல், ஆன்மீகத்தில் வியக்கத்தக்க கலவை... சிதம்பரத்தின் ரகசியம்
கந்தனுக்கு அரோகரா! சிக்கல் சிங்காரவேலருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம்! பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்
கந்தனுக்கு அரோகரா! சிக்கல் சிங்காரவேலருக்கு 5,000 லிட்டர் பால் அபிஷேகம்! பக்தி வெள்ளத்தில் பக்தர்கள்
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Embed widget