மேலும் அறிய

Ramadan 2023: இஸ்லாமியர்களின் புனித பண்டிகை ரம்ஜான் - ரமலான் மாதம் தொடங்குவது எப்போது?

Ramzan 2023: உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் மிகவும் முக்கியமான பண்டிகையாக ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான்(Ramadan Month) வருகின்ற மார்ச் 23 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள், இந்த மாதத்தில் அதிகாலை  சூரிய உதயத்திற்கு முன் எழுந்து இறைவனை தொழுது உணவு உண்டு நோன்பை தொடங்குவார்கள்.

பிறகு சூரிய அஸ்தமனத்திற்கு பின், நோம்பை முடிப்பார்கள். நோன்பு திறப்பதை இப்தார் என்று அழைப்பர். நோன்பு இருக்கும் முப்பது நாட்களும் தினசரி ஐந்து முறை தொழுகை செய்வது கட்டாயமாகும். ரமலான் மாதத்தை  இறைவனின் அருள் பெரும் மாதம் என்கிறார்கள் இஸ்லாமிய மத குருமார்கள். ரம்ஜான் மற்றும் ரமலான் என்றப் பெயர்களால் இந்த பண்டிகை அழைக்கப்படுகிறது.

இஸ்லாமிய நெறிமுறைகள்: 

இஸ்லாமிய மதம் ஐந்து அடிப்படைக் கடமைகளைக் கொண்டுள்ளது. கலிமா (இறைவனை நம்புதல்), தொழுகை (இறைவனை வழிபடுதல் ), சகாத் (ஏழை எளியோருக்குக் கொடுத்தல்), ஹஜ்ஜு (புனிதப் பயணம்), ரமலான் நோம்பு (நோம்பு) என உள்ளடக்கியது. இந்த காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என  அனைவரும் நோன்பு மேற்கொள்வார்கள். கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய் அடையும் பெண்கள், வயது மூப்பு பெரியவர்கள் என சில பேர்களுக்கு ரமலான் நோம்பிலிருந்து விலக்கு அளிக்கிறது. 

நோன்பின் தூய்மை:

நோம்பு இருப்பவர்கள் உடல் அளவில் மட்டும் அல்லாமல் மனதளவில் தயார் ஆக வேண்டும். இந்த புனித ரமலான் மாதத்தில்  இஸ்லாமியர்கள் நோம்பு இருப்பது மட்டும் அல்லாமல்  உலக  இச்சைகளைத் தவிர்க்க வேண்டும். நோன்பு இருப்பதுடன் நமது கடமை முடிந்து விடுகிறது என்று நினைக்காமல் தினசரி திருக்குர்அன் வாசித்தல் முடிந்தவரை இந்த காலத்தில் ஏழை எளியோருக்குக் கொடுத்தல்  என்பது இறைவனுக்குக் கொடுப்பதாக கூறப்படுகிறது.

நோன்பின்போது சுய ஒழுக்கத்துடன் இருப்பதும் முக்கிய ஒன்று. ஒரு மாதம் ஓய்வு பெறுவதன் மூலம் பலவிதமான நோய்களில் இருந்து மனிதன் காக்கப்படுகின்றான். நோன்பு இருக்கும் காலத்தில் நமது உடல் சுத்தமாகிறது. வருடம் முழுவதும் உடலிலும் மனதிலும் உள்ள தீய பழக்கங்கள், தீய எண்ணங்கள் நம்மிடம் இருந்து விடுபட்டு இந்த ரமலான் மாதத்தில் நாம் புத்துணர்வு அடைகிறது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. 

இந்தியாவில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மதத்தினரும் இணைந்தே பல இடங்களில் கொண்டாடி வருகின்றனர். 

மேலும் படிக்க:காலியாகும் பா.ஜ.க ஐ.டி.விங்.. 13 பேர் கூண்டோடு ராஜினாமா..! என்ன செய்யப்போகிறார் அண்ணாமலை?

மேலும் படிக்க: Annamalai: 'வீட்டுக்கு போயி டீ கொடுத்து சமரசம் பண்ண முடியாது..' - பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை...!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவுAnna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget