தாந்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தரிசனம்
முதல் சனிக்கிழமை என்பதால் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.
தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை அதிக அளவில் பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள்.
இந்நிலையில் புரட்டாசி மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று முதல் சனிக்கிழமை என்பதால் ஐந்து வார கிழமை பிடிக்கும் ஆன்மீக பக்தர்கள் இந்த சனிக்கிழமை முதல் தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். ஆகவே முதல் சனிக்கிழமை என்பதால் கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்ய கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து ஆலயம் சுற்றியுள்ள பல்வேறு திருமண மண்டபங்களில் பக்தர்களுக்கு காலை முதலே அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் இன்று முதல் புரட்டாசி மாத சனிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். மேலும், பக்தர்கள் அதிக அளவில் ஆலயம் வர இருப்பதால் தாந்தோன்றி மலை போலீசார் கூடுதல் பாதுகாப்பு ஆலயத்திற்கு வழங்கி வருகின்றனர்.
தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஜெயந்தி விழா கணபதி பூஜை நடைபெற்றது.
கரூர் மாரியம்மன் தேர் வீதி ஆலயம் அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் விஸ்வகர்மா ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று காலை விஸ்வகர்மா நிர்வாகிகள் முன்னிலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து, விசுவர்மா உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, அதை தொடர்ந்து இன்று இரவு சுவாமி திருவிதி உலா மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளதாக விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வரும் விஸ்வகர்மா ஜெயந்தி விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்றின் காரணமாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.