மேலும் அறிய

பழனி முருகன் கோயிலில் சண்முகர் திருக்கல்யாணம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

பழனி கந்தசஷ்டி நிறைவுநாள் நிகழ்ச்சியாக இன்று சண்முகர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி நிறைவுநாள் நிகழ்ச்சியாக இன்று சண்முகர் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

 


பழனி முருகன் கோயிலில் சண்முகர் திருக்கல்யாணம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த திங்கள்கிழமை காப்புக்கட்டுடன் துவங்கியது. ஒருவார காலம் நடைபெற்ற விழாவின் போது நாள்தோறும் அருள்மிகு சின்னக்குமாரருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. நேற்று ஆறாம் நாள் நிகழ்ச்சியாக அடிவாரம் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.  நிறைவுநாள் நிகழ்ச்சியாக இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது.  மலைக்கோயில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் சிறப்பாக அமைக்கப்பட்ட மணமேடைக்கு எழுந்தருளிய அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேதர் சண்முகருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.  

கல்வித் தகுதி இல்லாத உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம் - அண்ணாமலை பல்கலை., நடவடிக்கை போல் பிற கல்லூரிகளிலும் அரசு மேற்கொள்ளுமா.?


பழனி முருகன் கோயிலில் சண்முகர் திருக்கல்யாணம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
அபிஷேகத்தைத் தொடர்ந்து தம்பதி சமேதர் சண்முகருக்கு பட்டாடை,  நறுமணமிக்க வண்ணமலர்கள், ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரமும், அதைத் தொடர்ந்து சோடஷ உபச்சாரமும் நடைபெற்றது.  மேளதாளம் முழங்க சிவாச்சார்யார்கள் மந்திரம் ஓத மங்கலநாண் அணிவிக்கப்பட்டது.  பின்னர் மஹாதீபாராதனை நடத்தப்பட்டது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் பழனிக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் மற்றும் அறங்காவலர்கள், கோவில் அதிகாரிகள் ,உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.  விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மங்கல பிரசாதங்களும், திருமண விருந்தும் வழங்கப்பட்டது.

IND vs AUS Final Score LIVE: 50 ஓவர்களில் 240 ரன்கள்! ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் டார்கெட்! உலகக்கோப்பை யாருக்கு?

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

நவராத்திரி 9-ஆம் நாள்: சிவபூசை திருக்கோலத்தில் மதுரை மீனாட்சி அருள்மழை!
நவராத்திரி 9-ஆம் நாள்: சிவபூசை திருக்கோலத்தில் மதுரை மீனாட்சி அருள்மழை!
8 வயதிலேயே மிருதங்கத்தில் மிரட்டல்! பங்காரு காமாட்சி அம்மன் கோவில் விழாவில் சிறுவன் அச்சுதன் அசத்தல்!
8 வயதிலேயே மிருதங்கத்தில் மிரட்டல்! பங்காரு காமாட்சி அம்மன் கோவில் விழாவில் சிறுவன் அச்சுதன் அசத்தல்!
பட்டணப் பிரவேச பல்லக்குகள் முதல் உழவுக் கருவிகள் வரை: தருமபுரம் ஆதீனத்தில் விமரிசையாக நடந்த ஆயுத பூஜை வழிபாடு!
பட்டணப் பிரவேச பல்லக்குகள் முதல் உழவுக் கருவிகள் வரை: தருமபுரம் ஆதீனத்தில் விமரிசையாக நடந்த ஆயுத பூஜை வழிபாடு!
கங்கைநதியின் பாவம் போக்கிய காவிரி துலாக்கட்டம் : மயிலாடுதுறை துலா உற்சவ சிறப்புகள் இதுதான்..!
கங்கைநதியின் பாவம் போக்கிய காவிரி துலாக்கட்டம் : மயிலாடுதுறை துலா உற்சவ சிறப்புகள் இதுதான்..!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
Kovai Sathyan: அதிமுகவில் கோவை சத்யனுக்கு முக்கிய பதவி... யார் இவர்?
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்.. இந்த வேலையில் அவர் சூப்பர் ஸ்டார் - சபாநாயகர் புகழாரம்
மன்னிப்பு கேட்ட முதல்வர் விஜய்.. இந்த வேலையில் அவர் சூப்பர் ஸ்டார் - சபாநாயகர் புகழாரம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
மூதாட்டிக்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தவெக அமைச்சர்: சேலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
"இங்க சேர்க்கிறது பெருமை" காமராஜர் பள்ளியில் அலைமோதிய கூட்டம்... விஜயதசமி சிறப்புச் சேர்க்கை!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அதிகார துஷ்பிரயோகத்தை தட்டிக்கேட்டால் கைதா? சர்வாதிகாரியாக செயல்படும் தவெக அரசு! சீறும் மு.க.ஸ்டாலின்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
செஞ்சி சிறுமி மாய வழக்கில் புதிய திருப்பம்? வீட்டருகே தோண்டி தடயங்களைத் தேடும் போலீசார்!
coimbatore power cut: கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (21-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
ABP Nadu LIVE TV: இனிமேல் 24 மணி நேரமும்! உதயமானது ABP Nadu LIVE தொலைக்காட்சி!
Embed widget