மேலும் அறிய

131 ஆண்டுகளாக ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் 11 பெருமாள்கள் - எங்கே தெரியுமா? 

திருநாங்கூர் திவ்யதேச கோயில் நடைபெற்ற 11 தங்க கருடசேவை உத்ஸவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாள்களை தரிசித்தனர். 

பிரசித்தி பெற்ற திருநாங்கூர் திவ்யதேச கோயிலில் 131வது ஆண்டாக நடைபெற்ற 11 தங்க கருடசேவை உத்ஸவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாள்களை தரிசித்து வழிபாடு செய்தனர்.

திவ்ய தேச கோயில்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் பகுதியில் 108 வைணவ திவ்ய தேசங்களான, நாங்கூர் மணிமாடக்கோயில் ஸ்ரீ நாராயண பெருமாள், அரிமேய வின்னக ரம் ஸ்ரீ குடமாடு கூத்தர், ஸ்ரீ செம்பொன்னரங்கர், ஸ்ரீ பள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீ வண்புருடோத்தம பெருமாள், ஸ்ரீ வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள், திரு மேணிக்கூடம் ஸ்ரீவரதராஜ பெருமாள், கீழச்சாலை ஸ்ரீமாதவப்பெருமாள், பார்த்தன்பள்ளி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன்' ஆகிய 11 திவ்யதேச கோயில்கள் அமைந்துள்ளன. 

Ruturaj Gaikwad: மஞ்சள் படையின் கேப்டன், ருத்ராஜ் கெய்க்வாட்டின் பிறந்தநாள் - ஐபிஎல் போட்டியில் டாப் 5 சம்பவங்கள்


131 ஆண்டுகளாக ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் 11 பெருமாள்கள் - எங்கே தெரியுமா? 

உலக பிரசித்தி பெற்ற 11 தங்க கருடசேவை உத்ஸவம்

இங்கு ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் உலக பிரசித்தி பெற்ற 11 தங்க கருடசேவை உத்ஸவம் கோலாகலமாக நடைபெருவது வழக்கம். இந்த ஆண்டு கருட சேவை உத்ஸவம் இன்று  அதிகாலை நடைபெற்றது. 131வது ஆண்டாக நடைபெற்ற கருடசேவை உற்சவத்தை முன்னிட்டு முதல் நாள் நேற்று திருநகரி ஸ்ரீ கல்யாணரெங்கநாதர் கோயிலில் இருந்து திருமங்கை ஆழ்வார் புறப்பட்டு 11 திவ்ய தேசங்களுக்கு சென்று கருடசேவைக்கு வருமாறு பெருமாள்களை அழைக்கும் நிகழ்வு நடைபெற்றது. 

US Plane Crash: ஒரு உயிர் கூட பிழைக்கல.. 67 பேரும் பலி? கதறும் குடும்பத்தினர்.. அமெரிக்க விமான விபத்து நடந்தது என்ன?


131 ஆண்டுகளாக ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் 11 பெருமாள்கள் - எங்கே தெரியுமா? 

பெருமாள்களுக்கு அழைப்பு விடுத்த திருமங்கை ஆழ்வார்

அவரது அழைப்பை ஏற்று 11 பெருமாள்களும், தங்களது கோயில்களில் இருந்து புறப்பட்டு நாங்கூர் மணிமாடக்கோயிலில் நேற்று மாலை எழுந்தருளினர். அவர்களை திருமங்கையாழ்வார் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் 11 பெருமாள்களும், கோயில் மண்டபத்தில் எழுந்தருள, சிறப்பு திருமஞ்சணம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை மணிக்கு மணிமாடக் கோயில், ராஜகோபுர வாயிலில் மணவாள மாமுணிகளும், ஹம்ஸவாகனத்தில் குமுதவள்ளி தாயாருடன் திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருளினர். 

Budget 2025:பட்ஜெட் தயாரிப்பு குழுவில் இருப்பவர்கள் யார்? நிர்மலா சீதாராமன் டீம் இதுதான்!


131 ஆண்டுகளாக ஒரே நேரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் 11 பெருமாள்கள் - எங்கே தெரியுமா? 

திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களைப் பாடிய பக்தர்கள் 

பின்னர் அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒரு வராக தங்க கருடவாகனத்தில் எழுந்தருள, அவர்களுக்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்று. கும்ப தீப ஆரத்தி எடுக்கப்பட்டு தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களைப் பாடினர். தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் வீதியுலாகாட்சி நடைபெற்றது. இந்த புகழ் பெற்ற கருடசேவை விழாவில் தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள்களை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு திருநாங்கூர் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் முருகன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget