மேலும் அறிய

கொடைக்கானல் பூம்பாறையில் பழமையான குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம்

கொடைக்கானல் அருகே பூம்பாறையில் பழமையான குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கொடைக்கானல் அருகே பூம்பாறையில் பழமையான குழந்தை வேலப்பர் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவிலின் உப கோவிலான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேரோட்ட திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான தேரோட்ட திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதிஉலா வந்தார்.

மீனவரின் விரல்களை துண்டாடிய கொடூரம்.... நடுக்கடலில் இலங்கை கொள்ளையர்கள் அட்டூழியம்... கதறிய பெண்கள்..!

கொடைக்கானல் பூம்பாறையில் பழமையான குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம்

இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் குழந்தை வேலப்பர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். பின்னர் தேருக்கு முன்பு தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருவிழாவில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடிய படி நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. பின்னர் கோவிலுக்கு வந்த தேர் நிலையை அடைந்தது.

Bus Accident: அதிகாலையில் மலையில் இருந்து கவிழ்ந்து பேருந்து விபத்து: 39 பேர் பலி! பனாமாவில் சோகம்!

கொடைக்கானல் பூம்பாறையில் பழமையான குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம்

அதன்பிறகு பக்தர்கள் ரத வீதிகளில் அங்கப்பிரதட்சணம் செய்தனர். அத்துடன் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தமிழகத்திலேயே மலைப்பகுதியில் தேரோட்டம் நடைபெறும் முக்கிய இடங்களில் பூம்பாறையும் ஒன்று. இதனால் நேற்று நடந்த தேரோட்ட திருவிழாவில் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, தேனி, சிவகங்கை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்துகொண்டனர். தேரோட்டத்தையொட்டி பூம்பாறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tenkasi: தென்காசியில் கிணறு வெட்டும்போது வெடி விபத்து - 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!

கொடைக்கானல் பூம்பாறையில் பழமையான குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம்

பின்னர் இரவில் சுவாமி பூத்தேரில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக இன்று குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு மற்றும் திருக்கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் அதிகாரிகள், பூம்பாறை கிராம மக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு

Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து

Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Jani Master: பாலியல் புகாரால் வந்த வினை - நடன இயக்குனர் ஜானி மாஸ்டரின் தேசிய விருது ரத்து
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, Oct 6: துலாமுக்கு அமைதி, விருச்சிகத்துக்கு கவனம் - உங்கள் ராசிக்கான பலன்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
Breaking News LIVE 6th OCT 2024: சென்னையில் இன்று விமானப்படை சாகசம் - காலை முதல் மெரினாவில் குவிந்த மக்கள்

ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்

"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை

Embed widget