கரூர் மாவட்டத்தில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்
கரூரில் மாயனூர், வாங்கல், நெரூர், குளித்தலை காவிரி ஆற்றங்கரையில் தை அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்:
கரூர் மாவட்டத்தில் தை மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
கரூரில் மாயனூர்,வாங்கல், நெரூர், குளித்தலை காவிரி ஆற்றங்கரையில் தை அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர்:
தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி தை அமாவாசையான இன்று காவிரி ஆற்றுக்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கரூர் மாவட்ட காவேரி ஆற்றங்கரை ஓரத்தில் மாயனூர், குளித்தலை, நெரூர்,வாங்கல் உள்ளிட்ட ஆற்றங்கரையில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
அப்போது தர்ப்பணத்திற்கு வந்த பலரும் தங்களது மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயரை கூறி தர்ப்பணம் செய்தனர். அதன்பின்பு அவர்கள் பூஜை செய்து பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு சென்றனர். பின்னர் வீடுகளுக்கு வந்ததும் முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்டவற்றை படையல் இட்டு வழிபட்டனர்.
குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தமிழ் மாதங்களில் ஆடி, புரட்டாசி, தை மாதங்களில் வரும் மகாளய அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். அதன்படி தை அமாவாசை இன்று கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி தேங்காய், பழம், அரிசி, எள் காய்கறிகள் படையலிட்டனர். தங்கள் முன்னோர்களை மனதில் நினைத்து எள், பிண்டம் வைத்து வழிபட்ட பின்னர் அதனை காவிரி ஆற்றில் கரைத்தனர். அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபட்டு, பசு மாடுகளுக்கு அகத்திக் கீரையும் வழங்கினர்.