Karthigai Maha Deepam: கொப்பரையில் ஊற்றப்பட்ட 650 கிலோ நெய்.. 11 நாட்களுக்கு ஒளி.. அண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகா தீபம்..
2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலை உச்சியில் உள்ள பிரமாண்ட கொப்பரையில் 650 கிலோ நெய் ஊற்றி மகாதீபம் ஏற்றப்பட்டது.
2668 அடி உயரம் கொண்ட அன்ணாமலை உச்சியில் உள்ள பிரமாண்ட கொப்பரையில் 650 கிலோ நெய் ஊற்றி மகாதீபம் ஏற்றப்பட்டது. சரியாக மாலை 6.01 மணிக்கு தீபம் ஏற்றப்பட்ட நிலையில், 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில் பல லட்சம் பக்தர்கள் விண்ணைமுட்டும் அளவிற்கு அரோகரா கோஷம் எழுப்பி வணங்கினர்.
View this post on Instagram
செம்பினாலான 6 அடி உயர கொப்பரையில் 3,500 கிலோநெய், 1000மீட்டர் காடா துணியிலான திரியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இன்று திருவண்ணாமலை மலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாட்களுக்கு எரியும் வகையில் காட்சி அளிக்கும். சிவபெருமான் அக்னிப் பிழம்பாக காட்சி கொடுத்ததால் திருவண்ணாமலை மலை உச்சியில் ஆண்டுதோறும் மகாதீபம் ஏற்றப்படுகிறது. தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை முழுவதும் சுமார் 12,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தீபம் ஏற்றத்திற்கு பிறகு, 3 நாட்கள் தெப்பல் உற்சவம் மற்றும் 10-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, விரிவான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும், பாதுகாப்புப் பணிகளை காவல்துறையும் செய்து வருகிறது.
பாதுகாப்பு ஏற்பாடு:
தீபத் திருவிழாவிற்கு ஐஜி ஒருவர், டிஐஜி - 5 நபர்கள், எஸ்பி- 30 நபர்கள் என 12 ஆயிரத்தில் 097 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில், மாடவீதிகள் மற்றும் கிரிவலப் பாதையில் சிசிடிவி 500 கேமராக்களும், ஆளில்லா விமானம் 7, 57 கண்காணிப்பு கேமிராக்கள், 35 இடங்களில் மே ஹெல்ப் யூ ( may help you booths ) அமைக்கப்பட்டும் உள்ளது. தீப திருவிழா அன்று மலையின் மீது ஏறுவதற்கு 2500 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டுவார்கள். அவர்களுக்கு அவர்களுடைய புகைப்படங்கள் உள்ளவாறு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. திருவிழா கூட்டத்தில் சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்கள் எடுத்து அவர்கள் குற்றவாளிகளா என்பதை ( face tracker) செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்க குழந்தைகள் கையில் முகவரியின் கூடிய பேண்ட் கட்டப்படும். 101 இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது. 12 பெரிய திரைகளில் கோவில் நிகழ்வுகள் திரையிடப்பட்டும் வருகிறது.