மேலும் அறிய
Advertisement
kanchipuram: சித்ரகுப்தர் கோயில் கும்பாபிஷேக விழா - குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து வழிபட்டனர்.
காஞ்சிபுரத்தில் மட்டுமே கோவில் கொண்டுள்ள, பிரசித்தி பெற்ற அருள்மிகு சித்ரகுப்த சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
உலகில் உள்ள ஜீவராசிகளின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவராக கருதப்படுபவர் சித்ரகுப்த சுவாமி. சித்ரகுப்த சுவாமிக்கு இந்தியாவில் வேறு எங்கும் கோவில்கள் இல்லாத நிலையில் புண்ணிய நகரம், முக்தி தரும் நகரம், நகரேஷூ காஞ்சி, என விளங்கும் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் பஸ் நிலையம் அருகே உள்ள நெல்லுக்கார தெருவில் சித்ரகுப்தர் சுவாமி தனி சன்னதியில் கோவில் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.
கேது தோஷம், கலத்தர தோஷம், வித்யா தோஷம், புத்திர தோஷம், நிவர்த்தியாகும் திருத்தலமாக விளங்கி வருகிறது. இத்தகைய பழமையான இத்திரு கோவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு பல லட்ச ரூபாய் செலவில் திருக்கோவில் பணிகள் அழகு மிளிர செய்து முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராஜகோபுரம் மூலவர் விமானம் பரிவாரங்கள், அருள்மிகு சித்ர குபத் சுவாமிக்கு எண் மருந்து சாற்றி அஷ்டபந்தன, கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவிலில் அமைக்கப்பட்ட யாகசாலையில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத சிறப்பு யாக பூஜைகள் செய்யப்பட்டு, மேளதாளங்கள் முழங்க புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் சித்ரகுப்த சுவாமி கோவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோவில் கோபுரம் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் பல்வேறு வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சித்ரகுப்தர் சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து சுவாமியை வணங்கி வழிபட்டு சென்றனர்.
முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
சித்ரகுப்தர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டும் , அதேபோல், நாளை சித்ரா பௌர்ணமி விழாவை முன்னிட்டு , காஞ்சிபுரம் மாநகருக்குள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சித்திரகுப்தர் கோவிலுக்கு எவ்வித இடையூறுமின்றி, வந்து செல்ல ஏதுவாக காஞ்சிபுரம் மாநகருக்குள் உள்ள கீழ்காணும் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1.காஞ்சிபுரம். நெல்லுக்காரத் தெருவில் எவ்வித வாகனங்கள் வராமல் தடுக்க காஞ்சிபுரம் டவுன் பேங்க் சந்திப்பு மற்றும் இரட்டை மண்டபம் சந்திப்பு அருகே தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளது.
2.காஞ்சிபுரம் டவுன் பேங்க் வழியாக இரட்டை மண்டபம் நோக்கி வரும் வாகனங்களை பூக்கடைச் சத்திரம் மற்றும் GH சாலை வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3. இரட்டை மண்டபம் வழியாக டவுன் பேங்க் நோக்கி செல்லும் வாகனங்களை பேருந்து நிலையம் வழியாக மாற்றம் செய்யப்படடுள்ளது, என காவல்துறை தரப்பில் சரி தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion