மேலும் அறிய

’50 ஆண்டுகளுக்கு பிறகு கஜேந்திர மோட்சம்’ பக்தர்கள் பரவசம்..!

Gajendra Moksham: காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோவிலில் உள்ள கஜேந்திர புஷ்கரணி குளத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற கஜேந்திர மோட்சம் உற்சவம் நடைபெற்றது

காஞ்சிபுரம் மாநகராட்சி சின்ன காஞ்சிபுரம் பகுதியில், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜம் பெருமாள் திருக்கோவில் உள்ள கஜேந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் மாசடைந்து காணப்பட்டு வந்த நிலையில், ஆண்டு தோறும் ஆடி மாதம் நடைபெறும் கஜேந்திர மோட்சம் பெருவிழா குளத்தில் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

கஜேந்திர மோட்சம் உற்சவம்

இந்த குளத்தை முழுமையாக சீரமைத்து புறனமைப்பு பணி நிறைவு பெற்று தயாராகி இருந்த நிலையில், 50 ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு ஆடி மாத பெருவிழா கஜேந்திர மோட்ச உற்சவம் நடைபெற்றது. கஜேந்திர மோட்சம் உற்சவத்தை ஒட்டி அஷ்டபுஜ பெருமாள் பல்வேறு மலர்களால் அலங்கரித்து திருஆபரணங்கள் அணிந்து, கருடசேவை உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

50 ஆண்டுகளுக்கு பிறகு குவிந்த பக்தர்கள்

கோவிலில் இருந்து புறப்பட்டு நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாதித்த நிலையில், ஸ்தல வரலாறு ஆன இத்திருக்கோவிலில் உள்ள கஜேந்திர புஷ்கரணி என்னும் திருக்குளத்தில், அஷ்டபுஜ பெருமாள் எழுந்தருளி குளத்தை வளம் வந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திருக்கோவிலில் நடைபெற்ற கஜேந்திர மோட்சம் உற்சவத்தை ஏராளமான குளத்தின் கரையில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த உற்சவத்தில் ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்து ஸ்ரீ கஜேந்திர வரதனை வணங்கி அருள் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் S.K.P.S.சந்தோஷ் குமார், செயல் அலுவலர் சா.சி . ராசமாணிக்கம், அறங்காவலர்கள் M.இளங்கோவன் J.தேவிகா  உள்ளிட்ட உடன் இருந்தனர்.

அஷ்டபுஜகரம் ஆதிகேசவப் பெருமாள் கோவில்

கோயில் நகரமாக போற்றக்கூடிய காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருந்த போது இருந்து வருகிறது. இந்த கோயில் 44 வது திவ்ய தேசமாக உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேச தலங்களில் இங்கு மட்டுமே பெருமாள் எட்டு கரங்களுடன் மூலஸ்தானத்தில் காட்சி தருகிறார்.

ஒருமுறை சரஸ்வதி தேவிக்கு, லட்சுமி தேவி பெரியவரா, தான் பெரியவரா என்ற சந்தேகம் எழுந்தது. இது பற்றி பிரம்மாவின் மனைவி சரஸ் தனது கணவர் பிரம்மாவிடம் கேட்டார். அவருக்கு பிரம்மா லட்சுமி உயர்ந்தவர் என தெரிவித்ததால் பிரம்மாவின் மனைவி கோபம் அடைகிறாள். இதனைத் தொடர்ந்து இந்திரன் உள்ளிட்ட தேவர்களிடம் சரஸ்வதி முறையிட்டபோது, அவர்களும் லட்சுமி பெரியவள் என கூறியதால் ஆத்திரமடைந்து சரஸ்வதி பிரம்மாவை பிரிந்து செல்கிறார். 

இந்தநிலையில் காஞ்சிபுரத்தில் பிரம்மா அஸ்வமேத யாகம் செய்துள்ளார். அஸ்வமேத யாகம் செய்யும்போது எப்போதும் மனைவியுடன் செய்ய வேண்டும் என்பது விதியாக இருந்த போது அதை மீறி, பிரம்மா செயல்பட்டதால் மீண்டும் கடும் கோபம் அடைந்த சரஸ்வதி யாகத்தை தடுக்க பல்வேறு வகையில் முயற்சி மேற்கொண்டார். அதன்படி வேகவதி நதியாக வந்து தியாகத்தை தடுக்க முயற்சி செய்தபோது பெருமாள் அதிலிருந்து யாகத்தை காத்தருளினார். தொடர்ந்து யாகத்தை கெடுக்க பூதத்தை சரஸ்வதி ஏறிவிட்டார். கூட்டத்தை அழிப்பதற்காக திருமால் 8 கரங்களுடன் அவதாரம் எடுத்து பூதத்தை அளித்தார், என்பது இந்த கோயிலில் தல வரலாறாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vaithilingam joined DMK : வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது ஏன்.? இது தான் முக்கிய காரணம்- மு.க.ஸ்டாலின் சொன்ன ரகசியம்
வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது ஏன்.? இது தான் முக்கிய காரணம்- மு.க.ஸ்டாலின் சொன்ன ரகசியம்
Republic Day Award: தமிழகத்தில் டாப் 3 காவல் நிலையம் எது தெரியுமா.? முதலிடத்தை தட்டி தூக்கியது எந்த ஊர்.?
தமிழகத்தில் டாப் 3 காவல் நிலையம் எது தெரியுமா.? முதலிடத்தை தட்டி தூக்கியது எந்த ஊர்.?
ஆசிரியர்கள் போராட்டத்தில் சதி? தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற என்ன நடக்கிறது? SSTA எச்சரிக்கை!
ஆசிரியர்கள் போராட்டத்தில் சதி? தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற என்ன நடக்கிறது? SSTA எச்சரிக்கை!
Republic Day 2026: டாஸ் மூலம் இந்தியாவிற்கு கிடைத்த பாரம்பரிய சின்னம்..! பாக்., பிரிவினையின் முக்கிய வரலாறு
Republic Day 2026: டாஸ் மூலம் இந்தியாவிற்கு கிடைத்த பாரம்பரிய சின்னம்..! பாக்., பிரிவினையின் முக்கிய வரலாறு
ABP Premium

வீடியோ

MK Stalin vs Modi | டபுள் என்ஜின் vs டப்பா என்ஜின்! மோடியை விளாசிய ஸ்டாலின்! கோபமான தமிழிசை
Anbumani Mango symbol | அன்புமணிக்கு மாம்பழம்! சம்பவம் செய்த பாஜக! அப்செட்டில் ராமதாஸ் தரப்பு
”விசில் அடிக்க தெரியாதுபா?” பாவமாக சொன்ன விஜய் வைரலாகும் வீடியோ!
”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaithilingam joined DMK : வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது ஏன்.? இது தான் முக்கிய காரணம்- மு.க.ஸ்டாலின் சொன்ன ரகசியம்
வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது ஏன்.? இது தான் முக்கிய காரணம்- மு.க.ஸ்டாலின் சொன்ன ரகசியம்
Republic Day Award: தமிழகத்தில் டாப் 3 காவல் நிலையம் எது தெரியுமா.? முதலிடத்தை தட்டி தூக்கியது எந்த ஊர்.?
தமிழகத்தில் டாப் 3 காவல் நிலையம் எது தெரியுமா.? முதலிடத்தை தட்டி தூக்கியது எந்த ஊர்.?
ஆசிரியர்கள் போராட்டத்தில் சதி? தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற என்ன நடக்கிறது? SSTA எச்சரிக்கை!
ஆசிரியர்கள் போராட்டத்தில் சதி? தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற என்ன நடக்கிறது? SSTA எச்சரிக்கை!
Republic Day 2026: டாஸ் மூலம் இந்தியாவிற்கு கிடைத்த பாரம்பரிய சின்னம்..! பாக்., பிரிவினையின் முக்கிய வரலாறு
Republic Day 2026: டாஸ் மூலம் இந்தியாவிற்கு கிடைத்த பாரம்பரிய சின்னம்..! பாக்., பிரிவினையின் முக்கிய வரலாறு
Marutis Car Market: தனிக்காட்டு ராஜா..! ஆதிக்கம் செலுத்தும் மாருதி - டாடாவை முடித்த மஹிந்த்ரா - கியா நிலவரம்
Marutis Car Market: தனிக்காட்டு ராஜா..! ஆதிக்கம் செலுத்தும் மாருதி - டாடாவை முடித்த மஹிந்த்ரா - கியா நிலவரம்
Car Tax: அடி தூள்..! ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா To BMW, லாம்போகினி - ரூ.25 லட்சம் வரை குறையும்- இந்தியாவின் ஒப்பந்தம்
Car Tax: அடி தூள்..! ஃபோக்ஸ்வாகன், ஸ்கோடா To BMW, லாம்போகினி - ரூ.25 லட்சம் வரை குறையும்- இந்தியாவின் ஒப்பந்தம்
Republic Day 2026: டெல்லியில் கர்ஜிக்க போகும் புதிய ஆயுதங்கள்..! பைரவா படை, சூர்யஸ்தரம் ராக்கெட் - ராணுவ பலம்
Republic Day 2026: டெல்லியில் கர்ஜிக்க போகும் புதிய ஆயுதங்கள்..! பைரவா படை, சூர்யஸ்தரம் ராக்கெட் - ராணுவ பலம்
TN Roundup: குடியரசு தின உற்சாகம், விஜய் மீது திமுக அட்டாக், அன்புமணி அறிவிப்பு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: குடியரசு தின உற்சாகம், விஜய் மீது திமுக அட்டாக், அன்புமணி அறிவிப்பு - தமிழகத்தில் இதுவரை
Embed widget