13 ஆண்டுகளாக 1017 மலை படிகளில் உருண்டு ஏறி தாத்தா வேண்டுதலை நிறைவேற்றும் பேரன் - எதற்காக தெரியுமா..?
தனது தாத்தாவின் வேண்டுதலை தொடர்ந்து 13 வது முறையாக அய்யர் மலை 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார் .
குளித்தலை அருகே அய்யர்மலையில் உலக அமைதிக்காகவும், மக்கள் பசி பட்டியின்றி வாழ்ந்திட வேண்டும் என்ற தாத்தாவின் வேண்டுதலை தொடர்ந்து 13 வது ஆண்டாக 1017 மலை படிகளில் உருண்டு ஏறி சாமி வழிபாடு செய்து நிறைவேற்றி வரும் பேரன்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற புகழ்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த 4வது சோமவார விழாவில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பக்தர்கள் குடிப்பாட்டுக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டு காரர்கள் தேங்காய் பழம் உடைத்து சாமி தரிசனம் செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த 4வது சோமவார விழாவில் குளித்தலை அருகே நங்கவரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்ற இளைஞர் 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். இவரது தாத்தா நாகராஜன் என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக உலக அமைதிக்காகவும், மக்கள் பசி பட்டினி இன்றி நல்வாழ்வு வாழ்ந்திடவும் 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வந்தார்.
அவரது மறைவிற்குப் பின் தனது தாத்தாவின் வேண்டுதலை தொடர்ந்து 13 வது முறையாக அய்யர் மலை 1017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார் .
கரூர் மாவட்டம், உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத பஞ்சமி திதி.
கரூர் மாவட்டம், உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத பஞ்சமி திதியை முன்னிட்டு இன்று ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன்,நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து வாராகி அம்மனுக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்த பிறகு , சுவாமிக்கு தூப தீபங்கள் கட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
ஆலயத்தில் நடைபெற்ற வாராகி அம்மன் பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.