தஞ்சை, கும்பகோணத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள்: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
தஞ்சை திருஇருதய பேராலயத்தில் புனிதவெள்ளி சிறப்பு வழிபாடுகள் பரிபாலகர் எல், சகாயராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது.
தஞ்சாவூர்: தஞ்சை திருஇருதய பேராலயத்தில் புனிதவெள்ளி சிறப்பு வழிபாடுகள் பரிபாலகர் எல், சகாயராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. இதேபோல் கும்பகோணம் தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.
புனிதவெள்ளி சிறப்பு வழிபாடுகள்
தஞ்சை திருஇருதய பேராலயத்தில் புனிதவெள்ளி சிறப்பு வழிபாடு மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளாள் தலைமையில் நடந்தது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டு மரித்த நாளை புனிதவெள்ளியாக உலகில் உள்ள கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். இயேசுவின் பாடுகளை நினை கூறும் வகையில் , புனித அடுத்த அடுத்த நாளாக வரும் இருநாளை துக்கநாளாக கடைபிடிக்கபடுகிறது.
இயேசு சிறுவையில் மரிந்த நிகழ்வினை நினைவு கூறும் வகையில் அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து தேவாலயங்களுக்கு சென்று வழிபாடு நடத்தியும், சிலுவைபாதை பவனி மேற்கொண்டும், தங்களது பக்தியை வெளிப்படுத்துவார்கள்.
இறைவார்த்தை வழிபாடு
தஞ்சை திருஇருதய பேராலயத்தில் புனிதவெள்ளி சிறப்பு வழிபாடுகள் மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக இறைவார்த்தை வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து மறையுரையும் திருச்சிலுலை ஆராதனையும், பாடுபட்ட சிலுலையை இறைமக்கள் முத்திசெய்யும் சடங்கும் நடைபெற்றது. பின்னர் சிலுவை பாதை வழியாடு நடைபெற்றது.
இதில் திருச்சி புனிதபவுல் குருத்துவக் கல்லூரி பேராசிரியர் அன்பு அடிகளார் சிறப்பு மறையுரையாற்றினார். முடிவில் பரித்த இயேசுவின் உடல் சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு, பவனியாக புனித வியாகுல அன்னை ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. ஆதில் இறைமக்கள் கையில் எரிந்த மெழுகுவத்தியுடன் பாடி கொண்டும் ஜெபித்துக் கொண்டும்.
ஈஸ்டர் பெருவிழா திருப்பலி
இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பேராலய பங்குந்தந்தை பிரபாகர், உதவி பங்குச்சந்தை பிரவீன், ஆயரின் செயலர் ஆன்ரு செல்லழுமாள், திருந்தொண்டர் அன்புராஜா கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு திருஇருதய பேராலய வளாகத்தில் ஈஸ்டர் பெருவிழா திருப்பலியும், பாஸ்கா திருவிழிப்பு சடங்கும் நடக்கிறது. முடிவில் புனித வியாகுலமாதா ஆலய முகப்பில் ஆண்டவரின் உயிர்ப்பு காட்சி நிகழ்வு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத்தலைவர் வின்சண்ட் செயலர் குழந்தைராஜ், பங்கு பக்த சபையினர், பொறுப்பாளர்கள், இளைஞர் மன்றத்தினர் செய்து இருந்தனர்.
பாதம் கழுவும் நிகழ்ச்சி
இதேபோல் புனித வெள்ளியையொட்டி கும்பகோணத்தில், தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தவக்காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதனையொட்டி கடந்த 14-ந் தேதி பேராலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. கடந்த 24-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று குருத்தோலை ஞாயிறு சிறப்பு பவனி நடந்தது. அன்று முதல் புனித வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு பிரார்த்தனை
இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு தனது சீடர்களுக்கு திருவிருந்து அளித்தார். அன்றைய நாளில் தனது சீடர்களின் பாதங்களை இயேசு கழுவினார். இதனை நினைவு கூறும் வகையில், பெரிய வியாழன் நாளில் அனைத்து தேவாலயங்களிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் புனித வியாழனை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் ஜீவானந்தம் அமலநாதன் முதியவர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார். இதில் பங்குதந்தை பிளமின்தாஸ், கவ்வி செயலர் கஸ்பார், மறைமாவட்ட செயலர் பெர்பிட், ஆயரின் செயலர் அருள் உள்பட பலர் கலந்து கொண்டனர். புனித வெள்ளியையொட்டி நேற்று காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பு ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிலுவை பாதை நிகழ்வு நடந்தது. இதே போல் கும்பகோணத்தில் அனைத்து தேவாலயங்களிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திராளன கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.