மேலும் அறிய

Diwali 2023: தீபாவளி கொண்டாடுவதற்கு இத்தனை காரணங்களா? புராணங்கள் சொல்வது இதுதான்!

Reason For Celebrating Diwali: நரகாசுரனை வதம் செய்த தினத்தையே தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதாக கருதப்படும் நிலையில், மற்ற சில காரணங்களும் இருப்பதாக புராணங்கள் கூறுகிறது.

Reason for Diwali Celebration in Tamil: இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். சிறப்பு வாய்ந்த இந்த பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நரகாசுரனை வதம் செய்ததற்காக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறப்படுகிறது.

ஆனால், வட இந்தியாவில் 5 நாட்கள் கொண்டாடப்படும் இந்த தீபாவளி பண்டிகைக்கு வேறு சில காரணங்களும் கூறப்படுகிறது.

நரகாசுரனை வதம் செய்ததற்கான கொண்டாட்டம்:

பொதுவாக தீபாவளி பண்டிகை நரகாசுரனை வதம் செய்தததற்காக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. பூலோகத்தையும், விண்ணுலகத்தையும் ஆட்சி செய்த நரகாசுரன் தொடர்ந்து ஏற்படுத்திய அநீதியை அடுத்து, இந்திரன் முறையிட்ட காரணத்தால் கிருஷ்ண பகவான் நடத்திய லீலையில் சத்திய பாமா நரகாசுரனை வதம் செய்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

ராமர் மீண்டும் அயோத்தி திரும்பிய நாள்:

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமான அவதாரம் ராமர் அவதாரம் ஆகும். சீதையை மீட்பதற்காக இலங்கை சென்று ராவணனை வதம் செய்த ராமர், மீண்டும் சீதையுடன் அயோத்திக்கு திரும்பிய நாளே தீபாவளி என்றும், அந்த நாளையே மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபங்கள் ஏற்றி விழாவாக கொண்டாடடுவதாகவும் இந்தியாவின் பல பகுதிகளில் கருதப்படுகிறது.

பாண்டவர்களின் வனவாசம்:

ராமாயணம், பகவத் கீதைக்கு இணையாக இந்துக்களின் மற்றொரு புனித நூலாக கருதப்படும் இதிகாசம் மகாபாரதம் ஆகும். மகாபாரதத்தில் சூதாட்டத்தில் கௌரவர்களிடம் அனைத்தையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செல்வார்கள். பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதையே தீபாவளியாக கொண்டாடப்படுவதாகவும் கருதப்படுகிறது.

மகாவிஷ்ணு – மகாலட்சுமி திருமணம்:

தேவர்கள் – அசுரர்கள் இணைந்து பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து மகாலட்சுமி தேவி தோன்றினார். அவரை மகாவிஷ்ணு திருமணம் செய்த நாளே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் பல கூறப்பட்டாலும், இருளை நோக்கி வாழ்வில் ஒளியைத் தரும் பண்டிகையே தீபாவளி என்று மக்களால் நம்பப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget