மேலும் அறிய
Advertisement
முஸ்லிம் சிறுவனின் கிறிஸ்துமஸ் வாழ்த்து - திருப்பத்தூரில் நெகிழ்ச்சி
திருப்பத்தூரில் கிறிஸ்துமஸ் விழா கோலகாலமாக கொண்டாடிய கிறிஸ்தவர்கள் உலக அமைதி வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
திருப்பத்தூரில் சிறுவர்களுக்கு முஸ்லிம் சிறுவன் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியது அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் ஏசுநாதரின் பிறந்தநாளை ஆண்டும் தோறும் கொண்டாடி வருகின்றனர்.
அதன் அடிப்படையில், திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில் அமைந்துள்ள சகாய மாதா ஆலயத்தில் ஏசு நாதரின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள், பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஏழை, எளிய பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். உலக அமைதி வேண்டியும், அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழவேண்டியும் 3000க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் பிராத்தனை செய்தனர்.
திருப்பத்தூர் சுற்றியுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் கேரல் வாகனங்களில் வந்த கிறிஸ்த்துவ சிறுவர்களுக்கு முஸ்லிம் சிறுவன் ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியது அப்பகுதியில் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion