கரூர்: அய்யர்மலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா - பக்தர்கள் நேர்த்தி கடன்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத திருவிழாவினை முன்னிட்டு கடந்த மார்ச் 12ஆம் தேதி கம்பம் நடப்பட்டது.
அய்யர்மலை ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் பங்குனி மாத திருவிழாவினை முன்னிட்டு கடந்த மார்ச் 12ஆம் தேதி கம்பம் நடப்பட்டது. அதனை தொடர்ந்து தினந்தோறும் பக்தர்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
அதனை தொடர்ந்து இரவு தீமிதி திருவிழா நடைபெற்றது. விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். அய்யர் மலை சுற்றி உள்ள ஏராளமான பொதுமக்கள் தீமிதி திருவிழாவினை கண்டுகளித்தும் சுவாமி தரிசனம் செய்யும் வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து வான வேடிக்கை நிகழ்ச்சியும், பக்தர்கள் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி ஸ்ரீ சவுந்தரநாயகி ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஆலய கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து விநாயகர், முருகப்பெருமான்,வள்ளி, தெய்வானை, அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, கல்யாண பசுபதீஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா ஆலய மண்டபத்தில் இருந்து சிறப்பாக தொடங்கியது. மேல தாளங்கள் முழங்கு ஆலய மண்டபத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்து அடைந்தது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
புல்லா கவுண்டன் பாளையம் செல்வகுமாரசுவாமி குப்பன்ன சுவாமி, அத்தனூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் சின்ன தாராபுரம் அருகே உள்ள புல்லா கவுண்டன் பாளையத்தில் விநாயகர் செல்வக்குமாரசுவாமி குப்பண்ண சாமி அத்தனூர் அம்மன் மகாமுனி சுவாமி கோயில் உள்ளது.
அத்தனூர் அம்மன் மகாமுனி சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் தனிப்பெரும் தெய்வமாக விளங்கும் சிவபெருமானின் ஆறுமுகத்திலிருந்து தீய சக்திகளை அகற்றும் 33 கோடி தெய்வங்களின் குறையை நீங்க தீப்பொறி வடிவமாக தோன்றி வெல்ல முடியாத வகை எல்லாம் வென்றிட முத்தமிழுக்கும் தலைவனாகி மூன்று உலகத்திற்கும் இறைவனாகி செல்வகுமார் சுவாமி என்ற திருநாமம் கொண்டு உள்ளாக் கவுண்டன்பாளையத்தில் பகுதிவால் மக்கள் வாழையடி வாழையாக வரம் பெற்று வளமுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும், சுதை வடிவம் கொண்டிருந்த குப்பண்ண சுவாமியின் திருவுருவத்தை ஆண்டவனின் அருள்வாக்கிறிணங்க திருவுருவச் சிலையை புதியதாக கல் விக்ரகமாக வடிவமைத்தும் வர்ணங்கள் தீட்டியும் புத்தம் புது பொலிவுடன் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மகா கணபதி ஹோமம் விமான கோபுர கலசங்கள் அமைத்தல் குப்பன்ன சுவாமி கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து காவிரியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்தனர். மாலையில் முளைப்பாரி எடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து முதல் காலையாக சாலை பூஜைகளும் எந்திரம் வைத்து சுவாமி நிலை நாட்டுதல் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடைபெற்றன. இதில் புல்லா கவுண்டன் பாடி குடிப்பாட்டு மக்களும் அதனை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு அரவக்குறிச்சி எம்எல்ஏ, மஞ்சனூர் பி ஆர் இளங்கோ, முன்னாள் மேற்கு மண்டல ஐஜி பாரி, கோவை ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன், மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை புல்லாக்கவுண்டன்பாளையம் கோவில் திருப்பணி குழு நிர்வாகிகள் கோவில் சார்ந்த மக்கள் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.