Karthigai Viratham: ஐப்பசி மாத கார்த்திகை விரதம்.. என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என்னும் பெயர் உண்டு. அப்படியான அவனின் அருளைப் பெற விரதமிருக்கும் நாளாக இந்த கார்த்திகை விரத தினம் பார்க்கப்படுகிறது.

இந்து மதத்தில் தமிழ்க் கடவுள் என அழைக்கப்படுபவர் முருகப்பெருமான். அவருக்கு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்யாசம் இல்லாமல் பக்தர்கள் உள்ளனர். இத்தகைய முருகனுக்கு பல விசேஷ நாட்கள் என்பது உள்ளது. கார்த்திகை, பரணி, கிருத்திகை ஆகிய நட்சத்திரம் தொடங்கி சஷ்டி உள்ளிட்ட திதி வரை ஒரு மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் நிறைய நாட்கள் வரும். அப்படியான நிலையில் ஐப்பசி மாதத்தில் வரும் கார்த்திகை விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஐப்பசி மாத கார்த்திகை விரதமானது நவம்பர் 6ஆம் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை விரதம் பின்னணி
முருகப்பெருமானுக்கு கார்த்திகேயன் என்னும் பெயர் உண்டு. அப்படியான அவனின் அருளைப் பெற விரதமிருக்கும் நாளாக இந்த கார்த்திகை விரத தினம் பார்க்கப்படுகிறது. இந்த விரத வழிபாட்டை கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திர நாளில் நாம் தொடங்கி வாழ்க்கை முழுவதும் மேற்கொண்டால் மிகப்பெரிய அளவில் முருகனின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
நட்சத்திரம், திதி ஆகியவை நேரம் அடிப்படையில் குறிக்கப்படுவதாகும். அந்த வகையில் எந்தவொரு மாதத்திலும் எந்தவொரு நாளிலும் கார்த்திகை நட்சத்திரம் மாலை 5 மணிக்கு இருந்தாலே அந்த நாள் கார்த்திகை விரதம் இருக்க உகந்த தினமாக கருதப்படுகிறது.
விரதம் இருக்கும் பயன்கள்
கார்த்திகை விரதம் இருப்பவர்கள், அதற்கு முந்தைய நாளாக நவம்பர் 5ம் தேதி பரணி நட்சத்திர நாளில் மதியம் வரை உணவு எடுத்துக் கொள்ளலாம். பின்னர் இன்று இரவு முதல் உணவு உட்கொள்ளாமல் விரதம் ஆரம்பிக்கலாம். நாளை (நவம்பர் 6) அதிகாலையில் எழுந்து புனித நீராடி வீட்டின் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும்.
பின்னர் நாள் முழுவதும் உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருக்க வேண்டும். உடல் நலம் முடியாதவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். இந்த நாள் முழுவதும் முருகனின் திருப்புகழ், கந்த கலிவெண்பா, ஸ்கந்த புராணம், கந்த சஷ்டி கவசம் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். முடிந்தவர்கள் இரவு முழுவதும் விழித்திருக்கலாம். இல்லாவிட்டால் மறுநாள் காலையில் நீராடி வீட்டிலோ அல்லது அருகிலுள்ள கோயிலிலோ முருகனை வழிபட்டு விரதத்தை முடிக்கலாம்.
ஐப்பசி மாத கார்த்திகை விரதம் இருப்பவர்கள் அன்றைய நாளில் நிச்சயம் அன்னதானம் செய்ய வேண்டும். இதன்மூலம் ஏகப்பட்ட புண்ணிய பலன்கள் நமக்கு கிடைக்கும் என்பது தீகமாகும். அதுமட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியம், கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, திருமண தடை நீங்கல், குழந்தை பாக்கியம் ஆகியவையும் சிறப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.





















