மேலும் அறிய

ABP கோயில் உலா: பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டு நடைபெற்ற பஞ்சாக்கை அக்னிபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

தரங்கம்பாடி அருகே பஞ்சாக்கை கிராமத்தில் அமைந்துள்ள அக்னிபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தரங்கம்பாடி அருகே பஞ்சாக்கை கிராமத்தில் அமைந்துள்ள அக்னிபுரீஸ்வரர் கோயில்  தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் வெகு விமரிசையாக நடைபெற்ற கும்பாபிஷேகம் விழாவில் வேளாகுறிச்சி ஆதீனம், நாச்சியார் கோயில் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.

கற்பகாம்பிகை சமேத அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அடுத்த பஞ்சாக்கை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கற்பகாம்பிகை சமேத அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவார நால்வர்களில் ஒருவரான திருநாவுக்கரசரின் வைப்புத்தலமான இக்கோயிலில் தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானங்களின் ஜென்ம நட்சத்திர திருநாளில் வழிபாடு செய்யும் சிறப்புக்கு உரியது. கோயிலில் சுவாமி அம்பிகையை வழிபட்டால் தீமைகள், சத்ரு உபாதைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும், நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ABP கோயில் உலா: 33 அடியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட முருகன் சிலை - மெய்சிலிர்க்க தரிசனம் செய்த பக்தர்கள்

ABP கோயில் உலா: பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டு நடைபெற்ற பஞ்சாக்கை அக்னிபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஆதீனம்  27-வது குருமகா சன்னிதானம் முன்னிலையில் கும்பாபிஷேகம் 

இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கோயில், கடந்த பல ஆண்டுகளாக சிதிலமடைந்து இருந்தது. இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் உத்தரவின் பேரில் கோயில்கள் முழுமையாக திருப்பணி செய்து முடிக்கப்பட்டு, தொடர்ந்து பக்தர்களின் பங்களிப்புடன் கோயில் புனரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் அனைத்தும் நிறைவுற்றதை அடுத்து கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Abp Kovil Ula : கரூர் குளித்தலை அருள்மிகு ஸ்ரீ கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குடமுழுக்கு விழா.. குவிந்த பக்தர்கள்

ABP கோயில் உலா: பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டு நடைபெற்ற பஞ்சாக்கை அக்னிபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

பூர்வாங்க பூஜைகள்

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஜூலை 7-ம் தேதி பூர்வாங்க பூஜைகள், அதனைத் தொடர்ந்து ஜூலை 9-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது. கும்பாபிஷேக தினத்தில் ஆறாம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, புரணகஹதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு, மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார் புனிதநீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து கோயில் சுற்றி வலம் வந்து கோபுர கலசங்களை அடைந்தனர்.

ABP கோயில் உலா: பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டு நடைபெற்ற பஞ்சாக்கை அக்னிபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

புனிதநீர் ஊற்றல்

பின்னர் ராஜகோபுரம், விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், கொடிமரம்,  தட்சிணாமூர்த்தி சன்னதிகளை விமான கலசங்களில் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

ABP கோயில் உலா: பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டு நடைபெற்ற பஞ்சாக்கை அக்னிபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

கலந்துகொண்ட ஆதீனங்கள் 

அதனை தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் சூரியனார் கோயில் சிவாக்கிர யோகிகள், ஆதீனம் 28 வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18 -வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், நாச்சியார் கோயில் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவசுப்ரமணிய தேசிக  பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget