ஆடி முதல் வெள்ளி: கரூரில் ஒரு லட்சம் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த வேம்பு மாரியம்மன்
அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மனுக்கு காலையில் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கரூர் வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சுவாமி வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கரூர் நகரப் பகுதியில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மாரியம்மனுக்கு காலையில் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, இரவு வேம்பு மாரியம்மனுக்கு பக்தர்கள் வழங்கிய வளையல் அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஆலயத்தின் பூசாரி வேம்பு மாரியம்மனுக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறி, தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனையும் நடைபெற்றது. கரூர் நகரப் பகுதியில் உள்ள வேம்பு மாரியம்மன் ஆலய ஆடி முதல் வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தைக் காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து ஓம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன் வேம்பு மாரியம்மன் மனமுருகி வழிபட்டு சென்றனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு உழவர் சந்தை வாராகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை.
ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிலையில் மாலை வாராகி அம்மனுக்கு ஒரு லட்சம் வளையலால் அலங்காரம் செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.