Aadi Amavasya : ஆடி அமாவாசை.. வராக நதியில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி செய்து வழிபாடு..
பெரியகுளம் அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோயில் அருகே உள்ள வராக நதியில் ஆடி அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
![Aadi Amavasya : ஆடி அமாவாசை.. வராக நதியில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி செய்து வழிபாடு.. Aadi Amavasai 2023 People Take Holy Dip in Varaha River Worship Their Ancestors Tharpanam TNN Aadi Amavasya : ஆடி அமாவாசை.. வராக நதியில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி செய்து வழிபாடு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/16/f2dcef3b498ea9474c5ebd2e4c1de60c1692161994170739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேனி மாவட்டத்தில் பெரியகோவில் என பெயர் பெற்றது பாலசுப்பிரமணியர் திருக்கோவில். இங்கு மூலவர் லிங்க சொரூபமாக இராஜேந்திர சோழீஸ்வரர் இருந்தாலும் முருகன்தான் பிரசித்தி. இங்குள்ள முருகன் ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன், மயில் வாகனத்தில் காட்சி தருகிறார். எனவே இக்கோயிலை பாலசுப்பிரமணியர் கோயில் என்று தான் இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இங்கு புகழ் பெற்ற வராக நதிக்கரையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வராக நதியின் இருகரையிலும் நேரெதிராக ஆண் மற்றும் பெண் மருத மரங்கள் அமைந்திருக்கின்றன.
CM MK Stalin: டி.எம்.சௌந்திரராஜன் சிலையை திறந்து வைக்கும் முதலமைச்சர்.. இன்று மதுரை பயணம்..!
அதுவும் மருத மரங்களின் வேர்களுக்கிடையில் வராக நதி ஓடுகிறது. இந்த வராக நதிக்கரையில் நீராடினால் காசியில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை, இந்நதியை பிரம்ம தீர்த்தம் என்றும் கூறுவர். இந்நதியில் நீராடினால் தீராத வியாதிகள் தீரவும் திருமண தோஷம் பிள்ளை இல்லா குறை போன்ற பிரச்னை தீர்க்கும் புண்ணிய ஸ்தலமாக இத்திருத்தலம் விளங்குவதால், தங்களின் நேர்த்திக்கடன், வழிபாடுகளை இந்த கோவிலில் செய்கின்றனர் பக்தர்கள். மேலும் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் போன்ற வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
Modi Promises: பிரதமர் மோடி அளித்த டாப் 5 சுதந்திர தின வாக்குறுதிகள் - ஓர் அலசல்..!
இந்நிலையில் இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பெரியகுளம் பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் தங்களின் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி தேன், பால், பச்சரிசி, வாழைப்பழம், எல் போன்ற பொருட்களைக் கொண்டு பிண்டம் செய்து வைத்து தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டு பிண்டத்தை வராக நதி ஆற்றங்கரையில் கரைத்து தனது முன்னோர்களை வழிபட்டனர். இந்நிகழ்வில் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர்.
Modi Promises: பிரதமர் மோடி அளித்த டாப் 5 சுதந்திர தின வாக்குறுதிகள் - ஓர் அலசல்..!
இந்து கோயில்களின் முக்கிய ஒன்றாக கருதப்படும் கோசாலைகள் (பசுமாடுகள் வளர்க்கப்படும் இடம்) இங்கு அமைந்துள்ளது. பக்தர்கள் தங்களின் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்திய பின் கோசாலையில் உள்ள பசுக்களுக்கு கீரை, பழங்கள் கொடுத்து வணங்கி செல்வது இக்கோவிலின் சிறப்பாக கருதப்படுகிறது. இக்கோவிலில் திருவிழாக்கள், பிரதோஷங்கள், திருமணங்கள் என்று அனைத்தும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெரியகுளம் என்ற ஊரின் சிறப்பு பெரியகோயில் என்பதாகும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)