106 நாள்களில்...106 மாரத்தான்கள்...அசால்ட் காட்டிய சாதனை பெண்
பிரிட்டன் நாட்டை சேர்ந்த கேட் ஜெய்டன், 106 நாள்களில் 106 மாரத்தான்களில் கலந்து கொண்டு ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த கேட் ஜெய்டன், 106 நாள்களில் 106 மாரத்தான்களில் கலந்து கொண்டு ஓடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதிக நாள்களுக்கு தொடர்ந்து ஓடி மாரத்தானை நிறைவு செய்த பெண் என் பெருமையை படைத்திருப்பதாக கின்னஸ் தெரிவித்துள்ளது.
View this post on Instagram
டெர்பிஷயர் கவுன்டியை சேர்ந்த கேட், ஆரம்பத்தில் எந்த ஒரு சாதனையை படைக்கும் நோக்கத்திலும் இல்லை. ஆனால் டிசம்பர் 31, 2021 தொடங்கி ஏப்ரல் 15, 2022 வரையிலான காலத்தில் அதிக மைல் பயணித்து சாதனை படைத்துள்ளார்.
இருப்பினும், மீடியாவின் கவனம் தன் மீது பட்டதிலிருந்து, இந்த தேடுதல் சாதனைக்குரியதாக இருக்கும் என மக்கள் தன்னிடம் கூறியதாக கேட் கூறியுள்ளார். நிதி திரட்டும் முயற்சிகளை ஊக்குவிக்க இந்த ஊடக வெளிச்சம் உதவியது என தான் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர்தான் சாதனைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து போட்டியில் இறங்கியுள்ளார். ஏப்ரலில் முடித்த பயணத்தின் மூலம் அலிசா கிளார்க் (அமெரிக்கா) 95 நாட்கள் ஓடி வைத்திருந்த முந்தைய சாதனையை கேட் முறியடித்தார்.
பின்னர், தனிப்பட்ட பயிற்சியாளர்களான ஃபே கன்னிங்ஹாம் மற்றும் எம்மா பெட்ரி ஆகியோர் கேட்டின் சாதனையை சமன் செய்தனர். பணம் மற்றும் விளம்பரம் போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியிட்ட நிலையில், மூன்று விளையாட்டு வீரர்களும் இப்போது இந்த மகத்தான சாதனையை அந்தந்த தொண்டு நிறுவனங்களுக்காக பகிர்ந்து கொள்டுள்ளனர்.
நான்கு நாட்களுக்கு முன்பு கின்னஸ் சாதனையை தெரியப்படுத்தும் வகையில் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் கேட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பல பயனர்கள் கேட்டின் சாதனைக்காக அவரை வாழ்த்தியுள்ளனர்.
"அற்புதமான தொண்டு நிறுவனத்திற்காக அற்புதமான சாதனை. நீங்கள் நம்பமுடியாதவர்! சிறப்பு" என்று ஒரு பயனர் வாழ்த்தி கூறியுள்ளார். கேட் முதலில், 100 நாட்களில் 100 மாரத்தான்களை முடிக்க எண்ணினார். அலெப்போ, சிரியா மற்றும் யுனைடெட் கிங்டம் இடையே சுமார் 2620 மைல்கள் பயணம் செய்ய நினைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்