Israel Hamas War: போரை நிறுத்த அமெரிக்க கொண்டு வந்த தீர்மானம் தோல்வி.. ஐ.நாவில் எதிராக வாக்களித்த சீனா, ரஷ்யா..
இஸ்ரேல் ஹமாஸ் போரை நிறுத்த வேண்டும் என ஐநா கூறி வரும் நிலையில் ஹமாஸை ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 3 வாரமாக போர் நடந்து வருகிறது. முதலில் ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி வான்வழி தாக்குதலை தொடங்கியது. இதில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் ஹமாஸ் நோக்கி தாக்குதலை தொடங்கியது. கடந்த மூன்று வாரங்களாக இஸ்ரேல் காசாவில் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. நாளுக்கு நாள் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. அங்கு இருக்கும் மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை காசாவில் நடந்த தாக்குதலிக் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குழந்தைகள் எனவும் காசா சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது. அதேபோல எரிப்பொருள் பற்றாக்குறையால் காசாவில் இருக்கும் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை தவிர வேறு எந்த சிகிச்சையும் அளிக்கப்படுவதில்லை என காசா தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்று இரவுக்குள் எரிப்பொருள் கிடைக்கவில்லை என்றால் மருத்துவ சேவை பாதிக்கப்படும் என ஐ.நா முகமை தெரிவித்துள்ளது. காசாவில் ஐ.நா அமைத்துள்ள முகாம்களில் சுமார் 6 லட்சம் பேர் தஞ்சமடைந்துள்ளதாகவும் போதிய இட வசதி இல்லாததால் பலரும் தெருக்களில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Where wars rage, women suffer.
— António Guterres (@antonioguterres) October 26, 2023
Where authoritarianism & insecurity reign, women & girls’ rights are threatened.
Women’s participation in peace & security issues should be a default, not an afterthought. pic.twitter.com/gAg9TIXBE6
ஐ.நா சபையில் காசாவில் போரை நிறுத்தி அங்கு இருக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எதிராக சீனா கருத்து தெரிவித்து வாக்கு பதிவு செய்துள்ளது. ரஷ்யாவும் எதிராக வாக்கு அளித்ததால் அமெரிக்க தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் அங்கு போர் தொடரும் என தெரிய வந்துள்ளது. அதேசமயம் ஹமாஸ் மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை ரூ. 37 ஆயிரம் கோடி அளவில் செலவு செய்துள்ளதாக இஸ்ரேல் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 12,000 டன் வெடிப்பொருளை வீசியுள்ளதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
காசாவில் மக்கள் பாதுகாப்பையும் இஸ்ரேல் அரசு கவனம் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் கருத்து தெரிவித்துள்ளார். ஆஸ்தொரேலிய பிரதமருடனான சந்திப்பு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர், காசாவில் பொதுமக்கள் பின் ஹமாஸ் அமைப்பினர் ஒளிந்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாடினார். மேலும் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை வெளியிட்ட பாலஸ்தீன அரசு றிக்கையில் சந்தேகம் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்த கவனம் செலுத்தப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
יש לנו רק משימה אחת - לרסק את החמאס, ולא נפסיק עד שנשלים את המשימה. pic.twitter.com/QyNNeo1hF3
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) October 24, 2023
இது ஒருபுறம் இருக்க ஹமாஸ் அமைப்பினரால் சிறை பிடிக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இரு நாட்டினருக்கு இடையே நடைபெறும் போரை நிறுத்த வேண்டும் என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஹமாஸை ஒழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.