Pfizer's Covid pill : கொரோனா தடுப்பு மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி
பைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா மாத்திரைக்கு அமெரிக்காவின் எப்டிஏ ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக பைசர் நிறுவனம் தயாரித்த கொரோனா மாத்திரைக்கு அமெரிக்காவின் எப்டிஏ ஒப்புதல் வழங்கியுள்ளது. உயிரிழப்பு போன்ற தீவிர பாதிப்புகளைத் தடுப்பதில் இந்த மாத்திரை அதிக செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நோய் தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சையின் ஒரு பகுதியாக இந்த மாத்திரை வழங்கப்பட இருக்கிறது. 12 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு எந்தவொரு தீவிர பாதிப்புக்கு எதிரான பாதுகாப்பையும் இந்த மாத்திரை அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, மிகவும் அபாயம் உள்ள நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழலைக் குறைத்தும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களின் எண்ணிக்கையைக் குறைத்தும், ஏராளமான உயிர்களைப் பாதுகாக்கும் விதமாகவும் இந்த மாத்திரை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
New: WASHINGTON (AP) — US authorizes first COVID-19 pill, a Pfizer drug that can be taken at home to reduce hospitalizations, deaths.
— Kyle Griffin (@kylegriffin1) December 22, 2021
அமெரிக்காவில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது மாத்திரைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பைசர் கண்டுபிடித்த அந்த மாத்திரைக்கு பேக்ஸ்லோவிட் என பெயரிடப்பட்டுள்ளது. நலிவுற்ற பெரியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை தடுப்பதிலும் கோவிட்டால் ஏற்படும் மரணத்தை தடுப்பதிலும் 89% அளவிற்கு இந்த மாத்திரை தடுப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது. கொரோனாவின் அறிகுறிகள் தென்படும் நோயாளிகளுக்கு 3 மாத்திரைகள் 2 வேளைக்கு வழங்கப்படும். மற்றொரு அமெரிக்க மருந்து நிறுவனமான மெர்க் தயாரித்ததைவிட கூடுதல் பாதுகாப்பை ஃபைசரின் மருந்து வழங்குவதாகக் கூறப்படுகிறது.
டெல்டா வகையை விட அதிகமாகப் பரவக் கூடிய ஒமிக்ரான் வகை தொற்று, தற்போது 89 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த ஓப்புதல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், தடுப்பூசிகள் மூலம் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு திறனைப் பெற்றுள்ள நாடுகளில் கூட இந்த பரவல் விகிதம் அதிகரித்து வருகின்றது. இதற்கு ஒமிக்ரானின் தடுப்பூசிகளிலிருந்து தப்பிக்கும் அம்சங்கள் காரணமா? (அ) ஒமிக்ரான் பரவல் மற்றும் நோயின் தீவிரத் தன்மை காரணமா? என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. இரண்டு காரங்களும் ஒரு சேர இருக்கலாம் என்ற கோணத்திலும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக உலக சகாதார அமைப்பு முன்னதாக தெரிவித்திருந்தது. இருந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலைத் (ஆண்டிபாடி) தாண்டி அதிக ஆற்றல் பெற்ற வலிமையான செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தியும் (டி-செல்ஸ் அல்லது நினைவாற்றல் உயிரணுக்களே) பெறுகிறோம். எனவே, எந்தவொரு தீவிர பாதிப்புக்கு எதிரான பாதுகாப்பையும் தடுப்பூசி அளிக்கிறது என்றும் தெரிவித்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்