மேலும் அறிய

"நடுநிலையா இருக்காதீங்க.. இந்தியா நினைச்சா முடியும்" பிரதமர் மோடியிடம் உரிமையுடன் கேட்ட உக்ரைன் அதிபர்!

ரஷியாவுக்கு எதிரான போரில் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் நடுநிலைமையுடன் செயல்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மோடியிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.

உக்ரைனுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகரான கிவ்வில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் உரையாடினர். ரஷியாவுக்கு எதிரான போரில் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் நடுநிலையான நிலைபாட்டை எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மோடியிடம் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.

"இந்தியாவுக்கு பெரிய செல்வாக்கு இருக்கு"

இரு தரப்பு பேச்சுவார்த்தையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர், "போரை முடிவுக்குக் கொண்டு வர, நடுநிலையுடன் செயல்படாமல் இந்தியா எங்கள் பக்கம் இருக்க வேண்டும். நான் விரைவில் இந்தியாவுக்குச் சென்று இந்திய மக்களை சந்திக்க விரும்புகிறேன்.

ரஷியாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியாவுக்கு பெரும் பங்கு உள்ளது. இந்தியா உலகில் ஒரு முக்கியமான நாடு. அமைதியை ஏற்படுத்துவதில் அந்நாட்டால் பெரும் பங்கு வகிக்க முடியும்" என்றார். பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து பேசிய ஜெலன்ஸ்கி, "இத ஒரு நல்ல சந்திப்பு.

உண்மையில் ஒரு வரலாற்று சந்திப்பு. இது என்னையும் பிரதமர் மோடியையும் பற்றியது அல்ல. மாறாக தேசம் மற்றும் அதன் மக்களைப் பற்றியது. உக்ரைன் வந்ததற்காக பிரதமர் மோடிக்கு நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மோடி, ஜெலன்ஸ்கி பேசியது என்ன?

நாங்கள் இந்தியாவுடன் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட்டோம். இது ஒரு ஆரம்பம் என்று நான் நினைக்கிறேன். இந்த சந்திப்பின் போது, ​​எங்களது தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம் என்று பிரதமரிடம் தெரிவித்தேன்.

இந்த விவகாரத்தில் இந்தியா தனது பங்கை ஆற்றும். இது வெறும் மோதல் மட்டுமல்ல. இது ஒரு மனிதனின் உண்மையான போர் என்பதையும், உக்ரைன் என்று அழைக்கப்படும் முழு நாட்டிற்கும் எதிரான அவரது பெயர் புதின் என்பதையும் இந்தியா அங்கீகரிக்கத் தொடங்கிவிட்டது என்று நினைக்கிறேன்.

நீங்கள் ஒரு பெரிய நாடு. உங்களுக்கு பெரிய செல்வாக்கு உள்ளது. நீங்கள் புதினை தடுத்து நிறுத்தி அவரது பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைக்கலாம். அவருக்கான இடத்தில் அவரை வைக்கலாம்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget