மேலும் அறிய

Covid: கொரோனாவுக்கு வழங்கப்பட்ட மருந்தால் 17,000 பேர் உயிரிழப்பா? ஆய்வில் பகீர் - உலக நாடுகளில் பரபரப்பு!

கொரோனா முதல் அலையின்போது பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்தால் 17 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்தியா மட்டுமின்றி உலகியே புரட்டிப்போட்ட கொரோனா தொற்றுக்கு, வேக்சினால் தான் சீக்சிரம்  கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

17 ஆயிரம் பேர் உயிரிழப்பா?

இந்த கொரோனா காலக்கட்டத்தில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்  (HCQ) என்ற மருத்து மருத்துவர்களின் பரிந்ததுரையின்பேரில் பயன்படுத்தப்பட்டது. தடுப்பூசி கண்டுபிடிக்காத அந்த நேரத்தில், அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த மருந்து பயன்படத்தப்பட்டது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதுகுறித்து ஆய்வை நடத்தினர். கொரோனா முதல் அலையின்போது மார்ச் முதல் ஜூலை 2020 வரை பல உலக நாடுகளில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதாகவும், இந்த மருந்தால் 17,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  

அமெரிக்கா , துருக்கி, பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வில், அமெரிக்காவில் அதிகபட்சமாக 12,739 பேர் இந்த மருந்து எடுத்துக் கொண்டதால் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து,  ஸ்பெயினில் 1,895, இத்தாலியில் 1,822 பேரும், பெல்ஜியத்தில் 240 பேரும், பிரான்ஸில் 199 பேரும்,  துருக்கியில் 95 பேரும் உயிரிழந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

மார்ச் முதல் ஜூலை 2020ஆண்டுக்கு இடையில் ஆறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தான் 17 ஆயிரம் உயிரிழந்திருக்கின்றனர். மற்று நாடுகளையும் எடுத்துக் கொண்டால் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாகவே இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

புகழ்ந்து பேசிய டிரம்ப்:

இந்த  ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து குறித்து அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப்  பேசியிருந்தார். "ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை  நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம். இது மேஜிக் செய்யும் அதிசய மருந்தும் என்றும் கூறியிருந்தார்.  

முடக்கு வாதம் மற்றும் லூபஸை குணப்படுத்த பயன்படுத்தும் இந்த மருந்தை கொரோனா நோயாளிகளும் பயன்படுத்தலாம்" என்று கூறியிருந்தார்.மேலும், சில ஆய்வாளர்கள் மேஜிக் புல்லட் என்றும் கூறினார்கள். இதற்கு உணவு மற்றும் மருந்த நிர்வாகம் இந்த மருந்தை பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தது. 

இருப்பினும், ஜுன் 2020ல், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து  எந்த பலனும் அளிக்கவில்லை என்று பல ஆய்வுகளில் தெரியவந்தது. மேலும், இறப்பு விகிதமும் அதிகரித்ததால் உணவு மட்டும் மருந்து நிர்வாகமும் மருந்தின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
Embed widget