மேலும் அறிய

Israel Hamas War: மும்முனை தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்.. 330 பாலஸ்தீனியர்கள் கைது.. 10வது நாளாக இஸ்ரேல் - ஹமாஸ் போர்

ஹமாஸ் மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதலை நடத்தப்போவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 330 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினரிடையே போர் நடைபெற்று வருகிறது. முதலில் ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் நோக்கி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுளை ஏவி தாக்குதலை தொடங்கியது. இதில் இஸ்ரேலை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் உயிரிழந்தனர். வீடுகள், கட்டடங்கள், பள்ளிக்கூடங்கள் என அனைத்தும் சேதமடைந்தது. பலரும் தெருவில் நிர்கதியாக நின்றுள்ளனர். ஹமாஸ் குழுவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் பதில் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரம் கடந்து பதிவாகியுள்ளது. போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலுக்கு உதவி செய்யும் வகையில் அமெரிக்கா தனது படை வீரர்களையும், ஆயுதங்களையும் அனுப்பிவைத்துள்ளது. மேலும் இது போன்ற சூழலில் அமெரிக்கா உடன் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் குழுவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வந்தது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை தரை வழி தாக்குதலுக்கு தயாரான இஸ்ரேல் காசாவில் இருக்கும் 11 லட்சம் மக்களை அங்கிருந்து வெளியேறும்படி அறிவித்தது. ஆனால் மின்சாரம், குடிநீர் என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மக்கள் தவித்து வரும் நிலையில் இப்படி திடீரென வெளியேறச் சொல்வது சாத்தியமான விஷயம் இல்லை என ஐ.நா தெரிவித்தது. ஆனால் இஸ்ரேல் போரில் உள்ளது, இது சமரசம் செய்யும் நேரமில்லை என இஸ்ரேல் தரப்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. காசாவில் எப்போதும் இல்லாத அளவிற்கு சுமார் 3 லட்சம் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காசாவில் மும்முணை தாக்குதலை தொடங்கப்போவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. நேற்றைய முன்தினம் இஸ்ரேல் பிரதமர் ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பு படை இந்த அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், “மும்முணை தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதலை நடத்த உள்ளோம். பல்வேறு தாக்குதல் நடவடிக்கை திட்டங்களை செயல்படுத்த ராணுவம் தயாராகி வருகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ஒரு நேர்காணலில் இஸ்ரேலை,  காசாவை மீண்டும் ஆக்கிரமிக்க வேண்டாம் என்று எச்சரித்தார், ஹமாஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 29 அமெரிக்கர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து இதனை கூறியுள்ளார். மேலும், பெரும்பான்மையான பாலஸ்தீனியர்களுக்கும் ஹமாஸின் பயங்கரமான தாக்குதல்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும், அதனால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.   

 

தலைப்பு செய்திகள்

Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
Ali Khamenei Sons Crying Video: டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
Europe Heat Wave: இந்த டீல் நல்லா இருக்கே.! வெப்ப அலை வீசும் ஐரோப்பாவிற்கு ஈரான் கூலான ஆஃபர்; அது என்ன தெரியுமா.?
இந்த டீல் நல்லா இருக்கே.! வெப்ப அலை வீசும் ஐரோப்பாவிற்கு ஈரான் கூலான ஆஃபர்; அது என்ன தெரியுமா.?
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruma TVK Vijay: ”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
”தவெக ஆட்சிக்கு வந்ததில் மகிழ்ச்சி இல்லை..! நாங்கள் திமுக கூட்டணிங்க” திருமாவளவன் பேச்சு
Thiruma TVK Vijay:
"விசிகவை டேமேஜ் செய்கிறாராம், அரசியல் செய்கிறாராம்" உதயநிதி மீது திருமாவளவன் அட்டாக்
TVK DMK: உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
உளறிய உதயநிதி?லிஸ்ட் போட்டு திமுகவிற்கு முரட்டு அடி கொடுத்த தவெக - எது பேரிடர் காலம்?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
SENTHIL BALAJI vs TVK : கைதா.? ஜாமீனா.? செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
கைதா.? ஜாமீனா.? செந்தில் பாலாஜியை நெருங்கும் போலீஸ்- இன்று காத்திருக்கும் அதிரடி ட்விஸ்ட்.?
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
Embed widget