மேலும் அறிய

"பிரச்னை கைய மீறி போகுது" வெடிக்கும் அணு ஆயுத போர்.. ஓகே சொன்ன புதின்!

அணு ஆயுதங்களை கொண்டுள்ள நாட்டின் உதவியுடன் ரஷியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அணு ஆயுதத்தை பயன்படுத்த ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

அணு ஆயுதங்கள் இல்லாத நாட்டின் மீது அணு ஆயுதம் கொண்டு தாக்கும் உத்தரவுக்கு ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது, அணு ஆயுதங்களை கொண்டுள்ள நாட்டின் உதவியுடன் ரஷியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அணு ஆயுதத்தை பயன்படுத்த புதின் உத்தரவிட்டுள்ளார்.

ரஷியாவை தாக்குவதற்கு தங்களின் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ரஷிய அதிபர் புதின், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

புதின் போட்ட உத்தரவு:

கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி, தொடங்கிய உக்ரைன் போர் 1000 நாள்களை எட்டியுள்ளது.  உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கு இடையே நடந்து வரும் போர், உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. போரில் உக்ரைனுக்கு தேவையான உதவிகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் செய்து வருகிறது. 

போர் முடிவு பெறாமல் தொடர்ந்து வரும் சூழலில், பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு முக்கியத்துவம் வாய்ந்த முடிவு ஒன்றை எடுத்தது. ரஷியாவுக்கு உள்ளே தாக்குதல் நடத்த தங்களின் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா முதல்முறையாக அனுமதி வழங்கியது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று, அதிகாரம் கை மாற உள்ள நிலையில், ஜனநாயக கட்சியின் பைடன் இந்த முடிவை எடுத்தார். அடுத்தாண்டு ஜனவரி மாதம்தான், அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார்.

மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்குமா?

தேர்தல் பிரச்சாரத்திலேயே உக்ரைனுக்கு நிதி உதவி வழங்குவதற்கு எதிராக டிரம்ப் பேசி வந்தார். அதோடு, போர்களை முடிவு கொண்டு வருவேன் என உறுதி அளித்தார். இப்படிப்பட்ட சூழலில், ஆட்சியில் இருந்து செல்ல உள்ள பைடன், அதற்கு நேர்மாறான முடிவை எடுத்தார்.

இந்த நிலையில், தங்களின் அணு ஆயுத கொள்கையை ரஷிய அதிபர் புதின் மாற்றியுள்ளார். போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து ரஷிய அரசின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், "உக்ரைனுக்கு வழங்கி வரும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு மோதலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மேற்கத்திய நாடுகளின் உதவி எங்கள் செயல்பாட்டின் முடிவை பாதிக்காது. அது தொடர்கிறது, மேலும் நிறைவு செய்யப்படும். உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடரும். ரஷியா, எப்போதும் அணுவாயுதங்களை தடுப்பதற்கான வழிமுறையாகவே பார்க்கிறது. கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக உணர்ந்தால் மட்டுமே அவை பயன்படுத்தப்படும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
"முட்டாள்த்தனமா பேசாதீங்க.. இந்துக்களுக்கு அடி விழுது" பாஜகவை வறுத்தெடுத்த பிரியங்கா!
Embed widget