மேலும் அறிய

இலங்கைக்கு விடிவு பிறக்குமா?.. பரபரப்பான சூழ்நிலையில் கூடும் நாடாளுமன்றம்..

இலங்கையில் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுவதையடுத்து, ராஜபக்‌ஷே குடும்பத்தினர் தலைமையிலான ஆட்சி கவிழுமா? அல்லது இடைக்கால அரசு அமையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இலங்கையில் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுவதையடுத்து, ராஜபக்‌ஷே குடும்பத்தினர் தலைமையிலான ஆட்சி கவிழுமா? அல்லது இடைக்கால அரசு அமையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்ததையடுத்து பொதுமக்கள் வீதிக்கு வந்து தொடர் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர். அவர்களது ஒற்றைக் கோரிக்கை ராஜபக்சே குடும்பத்தினர் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்பது தான். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது இனவாதத்திற்கு ஆதரவாக நின்ற சிங்களர்கள் இப்போது அதே தமிழர்களுடன் கை கோர்த்து ராஜபக்சேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். காரணம் இலங்கை இந்த நிலமைக்கு வந்ததற்கு முழு காரணமும் அவர்கள் தான் என்பதால் தான். இலங்கையின் பெரும்பான்மை வருமானம் சுற்றுலா, தேயிலை உற்பத்தி, நெசவு ஆகியவை மூலமாக தான் கிடைத்துக்கொண்டிருந்தன. இலங்கையின் தொழில்வளத்தில் பெரும்பான்மையை ராஜபக்‌ஷே குடும்பத்தினரே ஆக்கிரமித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் அரசியல் மற்றும் அரச பதவிகளிலும் ராஜபக்சே குடும்பத்தினரின் ஆதிக்கம் தான் இப்போதும் இருக்கிறது. மகிந்த ராஜபக்‌ஷேவின் தந்தை டி.ஏ.ராஜபக்சே, பிரதமர்  மகிந்த ராஜபக்‌சே, அவரது தம்பிகள் கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்‌ஷே, சமல் ராஜபக்சே, அவரது மகன் நமல் ராஜபக்சே ஆகியோர் உயர் பதவிகளில் இருக்கின்றனர். இவர்களது குடும்பத்தினர் நிர்வாகப்பொறுப்புகளில் இருக்கின்றனர். சுமார் அரைநூற்றாண்டுக்கும் மேல் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ராஜபக்சே குடும்பம் தான். மோசமான முடிவுகள் மற்றும் உலக நாடுகளிடம் கடன்வாங்கியது போன்ற காரணங்களால் இலங்கையின் பணமதிப்பு கடுமையாக வீழ்ந்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கைக்கு விடிவு பிறக்குமா?.. பரபரப்பான சூழ்நிலையில் கூடும் நாடாளுமன்றம்..

இலங்கைக்கு தற்போதைய மதிப்பில் சுமார் 51 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டுக் கடன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கடனில் சுமார் 7 பில்லியன் டாலர்களை இந்த ஆண்டே செலுத்த வேண்டிய நிலையில் அதை செலுத்த முடியாத நிலையில் இருக்கிறது இலங்கை. தற்போதைய  கையிருப்பில் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களே இருப்பதால் இலங்கையின் பொருளாதார நிலை மேலும் வீழ்ச்சியடையும். நிலமை இன்னும் மோசமாகும் என்று கூறப்படுகிறது.

கடுமையான விலைவாசி உயர்வு இலங்கை பணக்காரர்களைக் கூட பிச்சைக்காரர்களாக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இதன் வெளிப்பாடு தான், எதிர்கட்சிகள், பொதுமக்கள், புத்தத்துறவிகள், மாணவர்கள், பொதுமக்கள் என்று ஒட்டுமொத்த இலங்கையும் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றன. 

இலங்கைக்கு விடிவு பிறக்குமா?.. பரபரப்பான சூழ்நிலையில் கூடும் நாடாளுமன்றம்..

இந்த நிலையில் தான், ஏப்ரல் 30ம் தேதிக்குள் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வேண்டும். இல்லையென்றால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எதிர்க்கட்சிகள் கூறியிருந்தனர். அதற்கு முன்னதாகவே அனைத்துக்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ராஜபக்சேவுக்கு பதிலாக புதிய பிரதமரை நியமிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் 225 எம்பிக்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்கள் ஆதரவுடன் பெரும்பான்மையக் காட்டும் கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதாக கோத்தபய ராஜபக்சே சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை எதிர்க்கட்சிகளும் ஏற்றுள்ளன.

இதன்காரணமாக பழைய சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய சபாநாயகராக அனுர பிரியதர்ஷன யாப்பா அல்லது திலான் பெரேரா ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. புதிய சபாநாயகர் நியமனத்திற்குப் பிறகு, பிரதமர் மகிந்த ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொண்டுவருவார்.

இலங்கைக்கு விடிவு பிறக்குமா?.. பரபரப்பான சூழ்நிலையில் கூடும் நாடாளுமன்றம்..

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கோத்தபய தோல்விபெறும் சூழல் வந்தால் அனைத்துக் கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசு அமைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இடைக்கால அரசு அமைந்தாலோ அல்லது புதிய அரசு அமைந்தாலோ அது தனது தலைமையில் தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார் கோத்தபய ராஜபக்சே. இந்த தீர்மானத்தில் தற்போதைய அரசு தோற்றாலும், இடைக்கால அரசு அமைக்க முடிவெடுக்கப்பட்டாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படும். அரசு பதவிகளில் ராஜபக்சே குடும்பத்தினர் யாரும் இருக்கக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், மீண்டும் கோத்தபய ராஜபக்சே தலைமையில் ஆட்சி அமைவது எந்த அளவிற்கு பயன்தரும் என்று தெரியவில்லை என்றும், இலங்கையில் ஆணிவேர் போன்று தங்கள் சாம்ராஜ்யத்தை பதித்துள்ள ராஜபக்சே குடும்பத்தினர் அவ்வளவு எளிதில் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக பொதுமக்கள் நடத்தி வரும் பலமாத போராட்டத்திற்கான பலன் என்னவாக இருக்கும் என்று இன்று தெரியவரும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget