Greece: குறும்படத்தில் பாரம்பரிய சின்னங்களில் பாலியல் காட்சிகள்... விசாரணைக்கு உத்தரவிட்ட அரசு!
கிரீஸ் நாட்டின் பாரம்பரிய சின்னங்களில் செக்ஸ் காட்சிகள் எடுத்தற்காக அந்த அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் திரைப்படங்களைவிட குறும்படங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன. அதிலும் யூடியூப் போன்ற வலைதளங்கள் வேகமாக பலரை சென்று சேர்வதால் குறும்படம் எடுப்போரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த குறும்படங்களின் மூலம் பல்வேறு விஷயங்களை அந்த இயக்குநர்கள் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். சமுதாய விழிப்புணர்வில் தொடங்கி பல கருத்துகள் இந்த குறும்படங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அப்படி ஒரு குறும்படம் சில காட்சிகளால் சிக்கலில் சிக்கியுள்ளது? எந்தப் படம் அது? எதற்காக சிக்கலில் சிக்கியுள்ளது?
கிரீஸ் நாட்டில் அமைந்துள்ள பாரம்பரிய சின்னங்களில் ஒன்று அக்ரோபாலிஸ். இந்த இடத்தை கிரேக்க அரசு மிகவும் கவனமாக பாதுகாத்து வருகிறது. இந்த சின்னத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் கிரேக்க அரசு பார்த்து கொண்டு வருகிறது. இந்தச் சூழலில் சமீபத்தில் குறும்படம் ஒன்று வெளியாகியுள்ளது. டெபார்தினான் என்ற குறும்படம் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் அக்ரோபாலிஸ் இடத்தில் வைத்து ஒரு செக்ஸ் காட்சி படமாக்கப்பட்டுள்ளது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதை பார்த்த கிரேக்க அரசு அதிகாரிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். அத்துடன் கிரேக்க அரசின் கலாச்சாரத்துறை இந்த விவகாரம் தொடர்பாக ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அக்ரோபாலிஸ் இடத்தில் யாருக்கும் திரைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படாத போது எப்படி இந்தப் படத்தில் எங்கு எடுக்கப்பட்டது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன? என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக ஒரு தெளிவான விசாரணைக்கும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்தப் படம் தொடர்பாக கிரீஸ் நாட்டிலுள்ள பல்வேறு நடிகர்களும் தங்களின் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக கிரீஸ் நாட்டின் நடிகர்கள் சங்க தலைவர் ஸ்பைரோஸ் பிபிலாஸ்,"அனைத்து விஷயங்களிலும் நாம் நம்முடைய ஆக்டிவிசத்தை காட்ட கூடாது. இதுபோன்ற பாரம்பரிய சின்னங்களில் நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும். அந்த சின்னங்களுக்கு கலங்கம் விலைவிக்கும் வகையில் எந்த ஒரு விஷயத்தை நாம் செய்ய கூடாது" என்று கூறி இந்த படத்தை எடுத்தவரை வன்மையாக கண்டித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: அதிசய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் 80-வது பிறந்தநாள்… டூடூல் ஆர்ட்டில் மரியாதை செய்த கூகுள்!