Indonesia Earthquake : என்ன நடக்குது? இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்...பீதியில் பயந்தோடிய மக்கள்.. சுனாமி வருமா?
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.
இந்தோனேசியா மலுகு பிராந்தியத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ள நிலநிடுக்கம் இந்தோனேசியாவை உலக்கியுள்ளது. இன்னும், சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.
உயிர் சேதம் எவ்வளவு?
97 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. இது மலுகுவின் தலைநகரான அம்போனிலிருந்து தென்கிழக்கே 543 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிர்சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.
பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் என அழைக்கப்படும் இந்தோனேசியாவில், நிலநடுக்கும் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று. இந்தோனேசியாவுக்கு அடியில் உள்ள புவியோடு அடிக்கடி மோதுவதால் நிலநடுக்கும் அடிக்கடி ஏற்படுகிறது.
பொதுவாக, இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் தமிழ்நாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதன் விளைவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது, ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் தமிழ்நாட்டில் ஏதேனும் இயற்கை பேரிடர் ஏற்படுமா என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
துருக்கி நிலநடுக்கம்:
சமீபத்தில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கும் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில், கடந்த வாரம் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது . பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றது. இந்தியா உட்பட பல நாடுகளும் மீட்பு பணிக்கு உதவி செய்து வருகின்றனர்.
உறைந்து கிடக்கும் தட்பவெப்பநிலைக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் இரண்டு நாள்களில் ஏற்பட்ட ஐந்து நிலநடுக்கத்தால் இரண்டு நாடுகள் நிலைகுலைந்துள்ளது. குறிப்பாக, ரிக்டர் அளவில் 7.8, 7.5 என பதிவான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
மோப்ப நாய்களின் உதவியுடனும், இடிபாடுகளில் யாரேனும் உயிருடன் சிக்கியுள்ளனரா என தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீடுகளை இழந்து தவித்து வரும் மக்கள், கடும் பனிப்பொழிவால் தங்க இடம் இன்றி தவித்து வருகின்றனர்.
கடந்த 2011ஆம் அண்டு ஜப்பானின் புகுஷிமா நகரில் நிகழ்ந்த அணு உலை விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை காட்டிலும் அதிக உயிரிழப்பு, இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ளது.
தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்கும் என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், ஆபரேஷன் தோஸ்த் மூலம் துருக்கி மற்றும் சிரியாவுக்கு தற்காலிக மருத்துவ முகாம்கள், மருந்துகள், மீட்பு படைகள் ஆகியவை அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.