மேலும் அறிய

அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகிய விவேக் ராமசாமி - அமெரிக்க அரசியலில் பரபரப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முடிவில் இருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி விலகியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக திகழ்வது அமெரிக்கா. பல நாடுகளின் பொருளாதாரமும் அமெரிக்காவைச் சார்ந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக அந்த நாட்டின் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில், அவர் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது அந்த நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அடுத்தாண்டு நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அமெரிக்க அதிபரான ஜோ பைடன், எதிர்வரும் தேர்தலும் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் சார்பின் ராபர்ட் கென்னடி, மரியான் வில்லியம்சன் ஆகியோரும் வேட்பாளர் போட்டியில் களம் இறங்க உள்ளனர். 

அதே போலவே, குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிர்ம்ப் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்டோரும் அதிபர் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினரான நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி ஆகியோரும் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. சொந்த கட்சியில் யாருக்கு அதிக ஆதரவு கிடைக்கிறதோ அவர் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். இதுவே வழக்கமாகும்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், ஓர் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாகதெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய விவேக் ராமசாமி, “அடுத்த ஜனாதிபதியாக நான் வருவதற்கு எந்தப் பாதையும் இல்லை. இந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை நாங்கள் இடைநிறுத்தப் போகிறோம். நான் டொனால்ட் டிரம்பை அழைத்து, வாழ்த்து தெரிவித்தேன். ஜனாதிபதி தேர்தலில் எனது ஆதரவு டிரம்பிற்கு இருக்கும். மேலும் இந்த நாட்டிற்கு நாங்கள் சரியானதைச் செய்யப் போகிறோம் என்று நான் நினைக்கிறேன். அதனால் எனது இந்த முடிவை ஆதரிக்க கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

38 வயதான விவேக் ராமசாமி ஒஹாயோவில் பிறந்தவர். இவரது பெற்றோர் தென்னிந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேறியவர்கள். விவேக் ராமசாமியின் தேர்தல் பிரச்சாரம் டிரம்ப்புக்கான உறுதியான ஆதரவால் குறிக்கப்பட்டது - குடியரசுக் கட்சி அரசியலில் அவரது முக்கியத்துவத்திற்கு பங்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

தலைப்பு செய்திகள்

Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Iran warns US : எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
எங்களை தொட்டா சும்மா விட மாட்டோம்.! அமெரிக்காவை அலறவைக்கும் ஈரான்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Embed widget