மேலும் அறிய

முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை காப்பாற்ற மத்திய அரசு அதிரடி.. மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு

மரண தண்டனை விதிக்கப்பட்ட அதிகாரிகளின் குடும்பத்தினரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளான கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சவுரப் வசிஷ்ட், கமாண்டர் புரேனேந்து திவாரி, கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கமாண்டர் சுகுணகர் பகாலா, கமாண்டர் சஞ்சீவ் குப்தா, கமாண்டர் அமித் நாக்பால், மாலுமி ராகேஷ் ஆகிய 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

உளவு பார்த்தார்களா முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள்?

இந்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த இவர்கள், தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸில் சேர்ந்துள்ளனர். இந்த தனியார் நிறுவனம்தான், கத்தார் பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி வழங்கி வந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், தனியார் நிறுவனத்துக்காக பணியாற்ற வந்த இவர்களை, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி, கத்தார் உளவுத்துறை கைது செய்தது. அப்போது இருந்து இப்போது வரை இவர்கள் தனிமை சிறையில் வாடி வருகின்றனர். ஆனால், இவர்கள் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.  

மரண தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள், ஒரு காலத்தில், இந்திய கடற்படையின் முக்கிய அதிகாரிகளாக பணியாற்றினர். இவர்களின் வழிகாட்டுதலில், முக்கியமான இந்திய போர் கப்பல்கள் இயக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளை விடுவிக்க கோரி அவர்களின் குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்திய அரசு எடுத்த அதிரடி முடிவு:

சமீபத்தில், மரண தண்டனை விதிக்கப்பட்ட அதிகாரிகளின் குடும்பத்தினரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். அவர்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர்களிடம் மத்திய அமைச்சர் வாக்குறுதி அளித்தார். 

இந்த நிலையில், கத்தார் நீதிமன்றத்தில் மரண தண்டனைக்கு எதிராக இந்திய அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "இந்திய அரசு சார்பில் ஏற்கனவே மேல்முறையீடு செய்யப்பட்டுவிட்டது.

தீர்ப்பின் விவரங்கள் ரகசியமானது. வழக்கறிஞர் குழுவுடன் மட்டுமே பகிரப்பட்டுள்ளது. மேலும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் (எட்டு கடற்படை அதிகாரிகளின்) குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேம், வெளியுறவு அமைச்சர் (எஸ் ஜெய்சங்கர்) அவர்களது குடும்பத்தினரை டெல்லியில் சந்தித்தார். சாத்தியமான அனைத்து சட்ட மற்றும் தூதரக ஆதரவையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவோம்" என்றார்.

முன்னாள் கடற்படை வீரர்கள், அதி முக்கியத்துவம் வாய்ந்த திட்டத்தில் பணியாற்றி வந்ததாகவும், அப்போது, பல முக்கிய தகவல்களை அவர்கள் கசியவிட்டதாகவும் செய்திகளில் தகவல் வெளியாகியுள்ளது. உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar Election: தேர்தல் வந்ததும் கோயில் வந்துருச்சு - பீகாரில் ராமரின் மனைவி சீதாவை களமிறக்கும் பாஜக கூட்டணி
Bihar Election: தேர்தல் வந்ததும் கோயில் வந்துருச்சு - பீகாரில் ராமரின் மனைவி சீதாவை களமிறக்கும் பாஜக கூட்டணி
Jailer 2: படையப்பா ஸ்டைலில் வந்த ரஜினி.. கடலென திரண்ட ரசிகர்கள்.. அதே குழந்தை சிரிப்பு
Jailer 2: படையப்பா ஸ்டைலில் வந்த ரஜினி.. கடலென திரண்ட ரசிகர்கள்.. அதே குழந்தை சிரிப்பு
IND Vs ENG: 100 அடிச்சும் ஜெய்ஸ்வாலை வெளுக்கும் ரசிகர்கள் - சச்சினே கடுப்பாய்ட்டார், பட்டர் ஃபிங்கர்ஸ் ஆமாம்..
IND Vs ENG: 100 அடிச்சும் ஜெய்ஸ்வாலை வெளுக்கும் ரசிகர்கள் - சச்சினே கடுப்பாய்ட்டார், பட்டர் ஃபிங்கர்ஸ் ஆமாம்..
Upcoming KIA Cars: எஸ்யுவி செக்மெண்டை ஆட்டிப்படைக்கும் கியா - குறிவெச்சு இறக்கும் 4 புதிய கார்கள், சந்தையில் சம்பவம்
Upcoming KIA Cars: எஸ்யுவி செக்மெண்டை ஆட்டிப்படைக்கும் கியா - குறிவெச்சு இறக்கும் 4 புதிய கார்கள், சந்தையில் சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan with Tamilisai | தள்ளி விட்ட பாதுகாவலர்! பதறிய பவன் கல்யாண்! தமிழிசை கொடுத்த Reaction
TVK Vijay | மீண்டும் நடிக்கும் விஜய்? கொளுத்திப்போட்ட மமிதா பைஜு!  கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்
NTK VS DMK Fight | ஸ்டாலினை விமர்சித்த நாதக.. ரகளையில் ஈடுபட்ட திமுகவினர்! விழுப்புரத்தில் பரபரப்பு
MDMK Demand On DMK | 12 தொகுதிகள் கட்டாயம்! ரூட்டை மற்றும் மதிமுக! கலக்கத்தில் திமுக
DMK vs TVK Fight | பேனரை கிழித்த திமுகவினர்.. தட்டிக்கேட்ட தவெகவினர்! மண்டையை உடைத்து அட்டூழியம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Election: தேர்தல் வந்ததும் கோயில் வந்துருச்சு - பீகாரில் ராமரின் மனைவி சீதாவை களமிறக்கும் பாஜக கூட்டணி
Bihar Election: தேர்தல் வந்ததும் கோயில் வந்துருச்சு - பீகாரில் ராமரின் மனைவி சீதாவை களமிறக்கும் பாஜக கூட்டணி
Jailer 2: படையப்பா ஸ்டைலில் வந்த ரஜினி.. கடலென திரண்ட ரசிகர்கள்.. அதே குழந்தை சிரிப்பு
Jailer 2: படையப்பா ஸ்டைலில் வந்த ரஜினி.. கடலென திரண்ட ரசிகர்கள்.. அதே குழந்தை சிரிப்பு
IND Vs ENG: 100 அடிச்சும் ஜெய்ஸ்வாலை வெளுக்கும் ரசிகர்கள் - சச்சினே கடுப்பாய்ட்டார், பட்டர் ஃபிங்கர்ஸ் ஆமாம்..
IND Vs ENG: 100 அடிச்சும் ஜெய்ஸ்வாலை வெளுக்கும் ரசிகர்கள் - சச்சினே கடுப்பாய்ட்டார், பட்டர் ஃபிங்கர்ஸ் ஆமாம்..
Upcoming KIA Cars: எஸ்யுவி செக்மெண்டை ஆட்டிப்படைக்கும் கியா - குறிவெச்சு இறக்கும் 4 புதிய கார்கள், சந்தையில் சம்பவம்
Upcoming KIA Cars: எஸ்யுவி செக்மெண்டை ஆட்டிப்படைக்கும் கியா - குறிவெச்சு இறக்கும் 4 புதிய கார்கள், சந்தையில் சம்பவம்
தேவயானிக்கு பிறந்தநாள் பார்ட்டி வைத்த தம்பி.. சூர்ய வம்சம் பாடலுக்கு நடனம்.. குவியும் வாழ்த்துகள்
தேவயானிக்கு பிறந்தநாள் பார்ட்டி வைத்த தம்பி.. சூர்ய வம்சம் பாடலுக்கு நடனம்.. குவியும் வாழ்த்துகள்
Top 10 News Headlines: குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி 2 தொகுதிகளில் முன்னிலை, ஹார்மூஸ் நீரிணையை மூடியதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்-11 மணி செய்திகள்
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி 2 தொகுதிகளில் முன்னிலை, ஹார்மூஸ் நீரிணையை மூடியதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்-11 மணி செய்திகள்
TamilNadu Roundup: திமுக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரியில் பட்டாக்கத்தியுடன் தவெகவினர் மோதல்-10 மணி செய்திகள்
திமுக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரியில் பட்டாக்கத்தியுடன் தவெகவினர் மோதல்-10 மணி செய்திகள்
ADMK: முருகன் மாநாட்டால் திமுக அதிர்ச்சி - அதிமுக வாய் திறக்காது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி
ADMK: முருகன் மாநாட்டால் திமுக அதிர்ச்சி - அதிமுக வாய் திறக்காது ஏன்? அடுக்கடுக்கான கேள்வி
Embed widget