இலங்கை ஹம்பந்தோட்டை துறைமுகத்தில், சீன கப்பலை நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்.
சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்
சர்ச்சையை கிளப்பியுள்ள சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின், செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிறுத்துவதற்கு இலங்கை அரசு தரப்பில் அனுமதி மறுத்ததாகவே சொல்லப்பட்டு வந்தது. சீனாவில் இருந்து கிளம்பிய அக்கப்பல் சர்வதேச கடல் எல்லைக்குள் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள், சில நாடுகளின் தலையீட்டின் பின்னரும்,சீனாவின் ‘யுவான் வாங் 5’ கணிக்கணிப்பு கப்பலுக்கு இலங்கை துறைமுகத்தில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் குறித்த சீனாவின் ஆய்வு கப்பல் ஆனது திட்டமிட்ட நாட்களைத் தாண்டி ஐந்து நாட்கள் தாமதமாகவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் என கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி அன்று துறைமுகத்திற்கு வரும் என தெரிகிறது .
சீன கப்பலின் வருகைக்கு இந்திய, அமெரிக்க அரசுகள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் அதற்கான முழு காரணங்களும் முன்வைக்கப்படாததால் சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியா ,சீன கப்பல் இலங்கைக்கு வருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தான் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரவிருந்த அந்தக் கப்பலின் வருகை தாமதமானதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த வாரம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இது குறித்து கவலை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அப்போது கப்பலின் வருகையை எதிர்ப்பதற்கான உறுதியான காரணங்களை வழங்குமாறு அவரிடம் கோரப்பட்டதாக தெரிகிறதுஅதேபோல் இந்திய தூதரக அதிகாரிகளிடமும் இலங்கை வெளியுறவு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்திய ,அமெரிக்க தரப்பிலிருந்து தாம் எதிர்ப்பதற்கான காரணங்கள் சரியான முறையில் முன்வைக்கப்படாததால், இலங்கை அரசால் சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகூ இருக்கிறது.
குறித்த சீன கப்பல் விவகாரம் தற்போது இலங்கைக்கு பெரும் தலைவலியாகவே மாறி இருப்பதாக கூறப்படுகிறது. இருந்த போதும் இலங்கை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சீன ஆய்வுக்கு கப்பல் ஹம்பந்தோட்டை துறைமுகத்திற்குள் வருவதற்கு இலங்கை அதிபர் அனுமதி வழங்கி இருப்பதாகவே இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.
பல நாடுகளின் அதிருப்தியை மீறி இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருவதால் சீன கப்பல் அங்கு வருவதற்குரிய அனுமதியை இலங்கை வழங்கியே ஆக வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறது. இந்நிலையில் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இலங்கை அதிபர் இணங்கி இருப்பதாகவே தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆகவே வெகு சீக்கிரத்தில் சீன கப்பல் ஆனது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய இருக்கிறது . சர்வதேச கடல் எல்லையில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த சீனாவின் ஆய்வுகப்பல் ஹம்பந்தோட்டை துறைமுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவே தகவல் வெளியாகியிருக்கிறது. குறிப்பாக இலங்கையிலுள்ள சில பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள், அரசியல் தலைவர்கள் சீனக்கப்பல் வருவதற்கு ஆதரவு தெரிவித்ததாகவே தெரிகிறது. சீன கப்பல் விஷயத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்படக்கூடாது என்பதன் அடிப்படையில் அந்த கப்பல் ஹம்பாந்தோட்டத்து துறைமுகத்துக்கு வருவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என இலங்கையில் அதிகாரிகள் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது