Chinese President Arrest ?: சீன அதிபர் ஜி ஜின்பிங் கைதா..? சீனாவில் ராணுவ ஆட்சியா...? என்ன நடக்கிறது..?
சீனா அதிபர் ஜி ஜின்பிங் கைது செய்யப்பட்டு, வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அந்நாட்டின் ராணுவம் கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிபர் கைது?
கடந்த 16ஆம் தேதி, உஸ்பெகிஸ்தான் நாட்டில் எஸ்.சி.ஓ. மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்று திரும்பிய போது, சீன ராணுவம் அவரை கைது செய்து வீட்டு காவலில் வைத்து உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இது குறித்து பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருவதாவது, சீன அதிபரும் , சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜி ஜின்பிங், கட்சி மற்றும் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்து வருகின்றனர். அவரை சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பிலிருந்து, கட்சியின் மூத்த தலைவர்கள் நீக்கி உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
Unconfirmed Reports: Military Coup in China, President Xi Jingping reportedly under house arrest in Beijing ? #CKMKB pic.twitter.com/iRGxXiIqsY
— URBAN MEMES BODY (@UrbanMemesBody) September 24, 2022
ராணுவம் ஆட்சி:
மேலும் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாகவும், அதற்கு காரணம் முன்னாள் அதிபர் ஹூ ஜிண்டோவும், பிரதமர் வென் ஜிபாவோமே தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கில் இராணுவ வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
rumors or reality; #XiJingping is under house arrest by Communist Party.
— Realmosubhai (@mosu_bhai) September 24, 2022
Military vehicles of the PLA 80 km long were seen in Beijing. pic.twitter.com/OwLeOCRxEh
அதுமட்டுமன்றி 60 சதவீத விமானங்கள் உடனடியாக தரையிறங்கியதாகவும் தகவல் வெளியகியுள்ளது.
Literally no flights from china
— Kanhaiyaa Lal Sarann (@SaranKL_) September 24, 2022
#XiJinping house arrest news could be very much true .#XiJingping pic.twitter.com/5bakTz559U
காரணம்:
சீனாவின் அதிபர் பதவியில் ஒருவர் இருமுறை மட்டுமே நீடிக்க முடியும். ஆனால், ஜி ஜின்பிங் மூன்றாவது முறையும் பதவி வகிக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியுள்ளது. இதை கருத்தில் கொண்டும், கொரோனா காலத்தில் சரிவர செயல்படாத காரணத்தாலும் பதவியில் இருந்து நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
New rumour to be checked out: Is Xi jingping under house arrest in Beijing ? When Xi was in Samarkand recently, the leaders of the Chinese Communist Party were supposed to have removed Xi from the Party’s in-charge of Army. Then House arrest followed. So goes the rumour.
— Subramanian Swamy (@Swamy39) September 24, 2022
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தனது டுவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, சீன அதிபர் ஜி ஜின்பிங் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் பரவி வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜி ஜின்பிங்கை நீக்கிவிட்டு, ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது என்று வதந்தி பரவி வருகிறது என தெரிவித்துள்ளார்.
சீனாவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக, உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.