மேலும் அறிய

அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடும் சீனா.. கொதித்தெழுந்த இந்தியா.. என்னதான் பிரச்னை?

Arunachal: அருணாச்சல பிரதேசத்தை தங்களின் எல்லைப்பகுதி எனக் கூறி, சீனா மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Arunachal: இந்திய, சீன நாடுகளுக்கு இடையே பல விவகாரங்களில் பிரச்னை நீடித்து வருகிறது. அதில், முக்கியமானது அருணாச்சல பிரதேச விவகாரம். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. 

இந்திய, சீன நாடுகளுக்கு இடையே பதற்றம்:

வடகிழக்கில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. கடந்த 1987ஆம் ஆண்டு, அருணாச்சல பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பிலிருந்தே அருணாச்சல பிரதேச்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. 

திபெத் தன்னாட்சிப் பகுதியின் ஒரு அங்கமே அருணாச்சல பிரதேசம் என கூறி வருகிறது. கடந்த 1962ஆம் ஆண்டு, அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது. பின்னர், கடும் அழுத்தத்தை தொடர்ந்து,  சீனா, அங்கிருந்து படைகளை திரும்பப் பெற்று கொண்டது.

இதற்கிடையே, சீனா, இந்திய நாடுகளுக்கு இடையேயான மோதல் சமீபகாலமாக தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக, டோக்லாம் பிரச்னை வெடித்ததில் இருந்து, இந்திய - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே பலமுறை மோதல் வெடித்துள்ளது. இந்திய - சீன - பூட்டான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள டோக்லாமில் சீனா சாலைகளை அமைக்க இந்தியாவும் பூட்டானும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

விஸ்வரூபம் எடுத்த அருணாச்சல் விவகாரம்:

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2020ஆம் ஆண்டு, கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்கள் மோதி கொண்டனர். இதில், இருதரப்பில் பலி எண்ணிக்கை பதிவானது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இப்படி பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், அருணாச்சல விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த நிலையில், அருணாச்சல பிரதேசம், தங்களின் எல்லைப்பகுதி எனக் கூறி, சீனா மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான், இதுகுறித்து குறிப்பிடுகையில், "இந்திய, சீன நாடுகளுக்கு இடையேயான எல்லை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

ஜாங்னனில் (அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா வைத்துள்ள அதிகாரப்பூர்வ பெயர்) இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பு அது எப்போதும் சீனாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. அந்த பிராந்தியம் முழுவதுமே சீனா சிறப்பாக நிர்வாகம் செய்து வந்துள்ளது.

சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில்தான் அருணாச்சல பிரதேசத்தை  இந்தியா நிறுவியுள்ளது. இது, மறுக்க முடியாத உண்மை" என்றார். இதற்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது.

முட்டாள்தனமான கருத்தை சீனா தெரிவித்திருப்பதாக கூறிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "இது புதிய பிரச்னை அல்ல. சீனா ஏற்கனவே சொந்தம் கொண்டாடியுள்ளது. இது, முட்டாள்தனமானது" என்றார்.

கடந்த ஒரே மாதத்தில், அருணாச்சல பிரதேசம் விவகாரத்தை சீனா 4 முறை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget