Myanmar Earthquake: இரண்டாக உடைந்தத Ava ப்ரிட்ஜ்; உருகுலைந்த கட்டிடங்கள்! - நடுங்க வைத்த காட்சிகள்!
Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. பாங்காக் உள்ளிட்ட பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழும் வீடியோ காட்சிகள் நெஞ்சை பதறவைப்பவைகளாக இருக்கின்றன.
Deeply saddened by the news of 7.7 magnitude #earthquake in #Myanmar
— Devender Yadav (@devendrayadvinc) March 28, 2025
My thoughts and prayers are with the people of Myanmar in this testing time. pic.twitter.com/zIhiwpEOMI
மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
மியான்மரில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.50 மணி (IST) அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. அந்நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
A powerful earthquake, with 7.7 richter scale in magnitude, near the epicenter Mandalay, Myanmar.
— Queen (@QueenSNabila) March 28, 2025
It causes the Ava Bridge in Myanmar and unknown 14 floors building in Thailand collapse.
Pray for Myanmar and Thailand 🙏 #แผ่นดินไหว #earthquake #breakingnews pic.twitter.com/otvBZdtkfe
நண்பகலில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் மியான்மரில் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 16 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக United States Geological Survey (USGS) தெரிவித்துள்ளது. முன்னதாக, காலை ரிக்டர் அளவில் 6.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாங்காங்கில் 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட இடர்பாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு குறித்த விவரம் இன்னும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
மியான்மரின் Mandalay நகரில் இருந்து 17.2 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காகிலும் அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு அமைப்பு உறுதி செய்துள்ளன.
A very scary scene is coming out from Bangkok. A building constructed at the cost of crores collapsed in a few seconds due to the earthquake. #earthquake #bangkokearthquakepic.twitter.com/7W3TkUggaX
— Satya Prakash (@_SatyaPrakash08) March 28, 2025
Mandalay நகரில் சுமார் 1.2 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். மியான்மரில் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ நிர்வாகம் பல்வேறு பகுதிகளில் state of emergency; என அறிவித்துள்ளது.
Ava Bridge - Mandalay இடிந்து விழுந்தது
Mandalay நகரில் உள்ள Ava பிரிட்ஜ் இடிந்து விழுந்தது. Taungoo-ல் உள்ள மசூதியும் நிலநடுத்தால் பாதி இடிந்துவிட்டது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அவை பதறவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Scenes from Bangkok, Thailand, affected by the massive earthquake in South East Asia today. #earthquake pic.twitter.com/Y6vT8xIiw7
— Anonymous (@YourAnonCentral) March 28, 2025
பெரிய மருத்துவமனை ஒன்றை ‘அவசர சிகிச்சை பிரிவு’ ஆக அறிவிக்கப்பட்டது. 1,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே காயமடைந்த பலர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நூறு பேர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மியான்மரில் நிலநடுக்கம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிகக்ப்பட்டுள்ளது.





















