11 நாட்கள்.. ஆழ்கடலில் உணவு இல்லாமல் தத்தளித்த நபர்.. மீட்கப்பட்டதும் கைதான கொடுமை..!
அட்லாண்டிக் பெருங்கடலில் தான் கொண்டுவந்த படகு மூழ்க தொடங்கியதால், பிரீஸர் பாக்ஸில் 11 நாட்கள் தத்தளித்துக் கொண்டிருந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடலில் தான் கொண்டுவந்த படகு மூழ்க தொடங்கியதால், பிரீஸர் பாக்ஸில் 11 நாட்கள் தத்தளித்துக் கொண்டிருந்த ஒருவர் மீட்கப்பட்டுள்ள நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜீலை மாதத்தில், 44 வயதான ரொமுவால்டோ மாசிடோ ரோட்ரிக் என்பவர் மீன்பிடிப்பதற்காக வடக்கு பிரேசிலின் அமபா மாநிலத்தின் ஓயாபோக்கிலிருந்து இலெட் லெ மேரிக்கு ஒரு மரப் படகில் புறப்பட்டுள்ளார். சில நாட்கள் மீன்பிடிக்க திட்டமிட்ட அவர், இனிதே தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
பயணிக்க தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ரோட்ரிக் சென்ற படகில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஏற தொடங்கியுள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாத அவர், மீன் சேகரித்து வைத்திருப்பதற்காக தான் கொண்டு வந்த பிரீஸர் பாக்ஸில் ஏறி உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தனது நேரத்தை கழித்துள்ளார்.
ரோட்ரிக்ஸ் நீரிழப்பு, திசைதிருப்பல் மற்றும் அவர் மீட்கப்பட்ட போது கிழிந்த ஆடைகளுடன் சரியான 11 நாட்கள் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்த ரோட்ரிக் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டார். அந்த 11 நாட்களில் அவர் கிட்டதட்ட 5 கிலோ வரை உடல் எடை குறைந்ததாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட பிறகு கருத்து தெரிவித்த அவர், “ தாகம் என்னை மிகவும் தொந்தரவு செய்தது . இந்த குளிர்சாதனப்பெட்டி, எனக்கு கடவுள். இது ஒரு அதிசயம். கடலில் மீன்கள் நிறைய இருப்பதால் நான் சுறாக்களால் தாக்கப்படுவேன் என்று நினைத்தேன். நல்ல வேளையாக காப்பாற்றப்பட்டேன்”என்றார்.
போலீஸ் அதிகாரி லூயிஸ் கார்லோஸ் போர்டோ கூறுகையில், "அவர் மிகவும் ஒல்லியாகவும், உடல் தளர்ச்சியுடன் காணப்பட்டார். ஆனால், மிகவும் உறுதியான மனநிலையில் இருந்தார். அவரது உடலில் இருந்த காயங்கள் சூரிய ஒளி பட்டு மிகவும் ஜொலித்தது. மேலும், அவருக்கு பார்வை பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதிக வெப்பம், உப்பு மற்றும் ஒளி, ஆனால் அவர் மிகவும் அமைதியாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தார்.
மீட்கப்பட்ட ரோட்ரிகஸ் கரை திரும்பிய பிறகு, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் தென் அமெரிக்க நாடான சுரினாமில் ஆவணங்கள் இல்லாததால் கைது செய்யப்பட்டார். அவர் பரமரிபோவில் உள்ள சிறையில் 16 நாட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் விமானத்தில் சொந்த நாட்டுக்கு திரும்பினார்.