மேலும் அறிய

அப்போ அமெரிக்கா.. இப்போ கனடா..! நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்மபொருள் - என்ன நடக்கிறது?

அமெரிக்காவை தொடர்ந்து கனடாவிலும் மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவிலும் மர்ம பொருள்:

கனடா வான்பரப்பில் அத்துமீறி பறந்த அடையாளம் தெரியாத மர்மப் பொருள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, அந்நாட்டு அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதுதொடர்பான ட்விட்டர் பதிவில், ”கனடா வான்வெளியில் அத்துமீறி பறந்த அடையாளம் தெரியாத ஒரு பொருளை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டேன். கனடா  மற்றும் அமெரிக்க விமானங்கள் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டன.

அப்போது, அமெரிக்காவின் F-22 விமானம் அந்த மர்ம பொருளை சுட்டு வீழ்த்தியது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் உடன் தொலைபேசி மூலமாக பேசினேன். சுட்டு வீழ்த்தப்பட்ட மர்மப் பொருளின் பாகங்களை சேகரித்து அவற்றை ஆய்வு செய்யும் பணிகளை, கனடா மேற்கொள்ளும்.  வட அமெரிக்கா பிராந்தியத்தை கண்காணிப்பதற்காக அமெரிக்க படைகளுக்கு நன்றி” எனவும் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். சுட்டு வீழ்த்தப்பட்ட பொருளின் பாகங்கள் யுகோன் பகுதியில் வீழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிலும் மர்மப் பொருள்:

முன்னதாக, நேற்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் மீது 40 ஆயிரம் அடி உயரத்தில் ஏதோ மர்மப் பொருள் ஒன்று பறக்க அதனை அந்நாட்டு ராணுவம் ஜெட் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளது.  இதுதொடர்பாக விளக்கமளித்த அந்நாட்டு அரசு, ”அந்த மர்மப் பொருள் எங்கிருந்து வந்தது. அதன் நோக்கம் என்னவென்றெல்லாம் எங்களுக்கு இன்னும் உறுதியாகவில்லை. ஆனால் 40 ஆயிரம் அடி உயரத்தில் மர்மப் பொருள் பறப்பது விமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் என்பதால் அதனை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம். அதிபர் ஜோ பைடன் உத்தவின் பேரில் நாங்கள் அதனை சுட்டு வீழ்த்தினோம்” என தெரிவித்துள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பொருளின் பாகங்கள்,   வடக்கு அலாஸ்காவில் கனடா நாட்டு எல்லையை ஒட்டி உறண்ட நீர் நிலை மீது விழுந்துள்ளது.

உளவு பலூன்:

கடந்த வாரம் வடக்கு அமெரிக்கா மேலே சீனாவின் ராட்சத பலூன் பறந்து கொண்டு இருந்தது. அது வெறும் வானிலை ஆராய்ச்சிக்கான பலூன் என சீனா விளக்கமளித்தாலும், அமெரிக்கா அதனை ஏற்காமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுட்டு வீழ்த்தியது. F-22 ரேப்டர் ரக ஜெட் கொண்டு AIM-9X ஏவுகணை மூலம் அந்த பலூன் அழிக்கப்பட்டது. இதே ஜெட் விமானத்தையும், ஏவுகணையையும் கொண்டு தான் அலாஸ்காவில் பறந்த மர்மப் பொருளும் சுட்டு வீழ்த்தப்பட்டது.

தொடரும் குழப்பம்:

வடக்கு அமெரிக்காவின் வான்வெளி பரப்பில் கடந்த 2 வாரங்களில் மூன்று முறை அத்துமீறல்கள் நடைபெற்று உள்ளன. இதனால் அந்த பிராந்தியத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் பறந்த இந்த பொருட்கள் விமான ஓட்டி இல்லாமல் அந்த பொருட்கள் எப்படி பறந்தன? அவை எந்த நாட்டிற்கு சொந்தமானது? ஏலியன் விமானமா? எதற்காக பறந்தது? மக்களுக்கு இது ஆபத்து விளைவிக்குமா என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget