மேலும் அறிய

Plane Crash: கலிபோர்னியா பகுதியில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழப்பு..

கலிபோர்னியா மலை விமான நிலையம் அருகே ஒற்றை எஞ்சின் – சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த மூன்று பேரும் உயிரிழந்தனர்.

கலிபோர்னியா மலை விமான நிலையம் அருகே ஒற்றை எஞ்சின் – சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த மூன்று பேரும் உயிரிழந்தனர்.

அமெரிக்கா - காலிபோர்னியா மாகாணத்தில் சிறிய ரக விமானத்தில் 3 பேர் பயணம் மேற்கொண்டனர். அப்போது பிக் பியர் என்ற பகுதி அருகே விமானம், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தொடர்பு துண்டிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக அந்த இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்து சென்றனர். அப்போது அந்த விமானம் நொறுங்கி விழுந்து கிடந்ததை கண்டனர். இந்த விபத்தில் அதில் பயணம் மேற்கொண்ட 3 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.  

பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் இந்த விபத்தை பற்றிய அறிக்கையில், Beechcraft A36 (சிறிய ரக விமானம்) பிக் பியர் சிட்டி விமான நிலையத்திற்கு அருகே பிற்பகல் 2 மணியளவில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் மேற்கொண்டவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்பட்டது. மேலும் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பிக் பியர் விமான நிலையம், லாஸ் ஏஞ்சல்ஸுக்கு கிழக்கே பிரபலமான ரிசார்ட் பகுதியான பிக் பியர் ஏரிக்கு அருகிலுள்ள சான் பெர்னார்டினோ மலைகளில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெற்கு கலிபோர்னியாவில் கடந்த 3 நாட்களில் நடந்த இரண்டாவது விபத்து இதுவாகும். கடந்த சனிக்கிழமையன்று, லாஸ் ஏஞ்சல்ஸ் சுற்றுப்புறத்தில் அடர்ந்த மூடுபனிக்கு காரணத்தால் ஒற்றை எஞ்சின் விமானம் விபத்துக்குள்ளானது. செஸ்னா சி 172 என்ற சிறிய ரக விமானம் சனிக்கிழமை இரவு 8:45 மணியளவில் நகரின் மேற்குப் பகுதியில், 13 கிமீ தொலைவில் விபத்துக்குள்ளானது என்று லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை மற்றும் ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் 24 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டது.  ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விமானம் விபத்துக்குள்ளான காரணம் என்ன என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.         

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
சர்ச்சைக்கு பின் மீண்டும் தேடிவந்த தலைமைப்பதவி - Nvidia தலைவர், சி.இ.ஓவாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமனம்!
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
மத்தியக்கிழக்கில் மீண்டும் பதற்றம்! - அமெரிக்க ராணுவத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல்
Trump: ”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்
”இந்தியாவை பாருங்கயா, இவ்ளோ வட்டிய போட்டா எப்படி” - அமெரிக்க ரிசர்வ் வங்கியுடன் ட்ரம்ப் மோதல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
"சங்கி +கொத்தூஸ் இரண்டுக்கும் ஏமாற்றம்" - தீபவிவகாரம் குறித்து பதிவிட்ட மாணிக்கம் தாகூர்!
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
Tiruvannamalai Deepam 2026 LIVE: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.. ஜோதியாய் ஈசன்.. மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்
Tiruvannamalai Deepam 2026 LIVE: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.. ஜோதியாய் ஈசன்.. மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
Embed widget