மேலும் அறிய

Japan Earthquake: ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவு..

ஜப்பான் மேற்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பான் மேற்கு பகுதியில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்ஷூ அருகே அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சத்துடன் வெளியேறியுள்ளனர். மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 மீட்டர் அளவு கடல் அலைகள் உயரலாம் என மிக அதிகமான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஜப்பான் வானிலை ஆய்வு மையம், இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜப்பானின் பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தலைநகர் டோக்கியோவிலும், கான்டோ பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.   

Hokuriku Electric Power தனது அணுமின் நிலையங்களில் ஏதேனும் சேதம் ஏற்பட்டு உள்ளதா என சோதித்து வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,  ஜப்பானின் கன்சாய் அணுமின் நிலையம் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் எந்த அசாதாரணமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. கடுமையான் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு ஜப்பான் பகுதிகளில் இருக்கும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 

ஜப்பானில் உள்ள இஸூ தீவில் கடந்த அக்டோபர் மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.6 ஆக பதிவானது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இஸூ பகுதியில் உள்ள டொரிஷிமா அருகே காலை 11 மணிக்கு ஏற்பட்டதாக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. மேற்கு பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இஸூ தீவுகளில் குறைந்தபட்சம் 30 செ.மீ உயரம் கொண்ட சுனாமி அலைகள் கணிக்கப்பட்டுள்ளது. முதலில் டோக்கியோவின் தெற்கே அமைந்துள்ள தீவு பகுதியில் 1 மீட்டர் வரையிலான சுனாமி அலைகள் கணிக்கப்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை கொடுக்கப்பட்ட சற்று நேராத்திலேயே அது திரும்பப் பெறப்பட்டது. கடலோர மற்றும் ஆற்று படுக்கை அருகே இருக்கும் மக்கள் உயர்வான பகுதியை நோக்கிச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs RR LIVE Score: மீண்டும் டாஸ் தோற்ற ருதுராஜ்; பேட்டிங் செய்ய களமிறங்கும் ராஜஸ்தான்!
CSK vs RR LIVE Score: மீண்டும் டாஸ் தோற்ற ருதுராஜ்; பேட்டிங் செய்ய களமிறங்கும் ராஜஸ்தான்!
"சர்ப்ரைஸ் காத்திருக்கு.. மைதானத்தில் காத்திருங்க" ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள்!
TN Headlines: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! பல மாவட்டங்களில் கனமழை - இதுவரை ஒரு ரவுண்ட் அப்!
TN Headlines: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! பல மாவட்டங்களில் கனமழை - இதுவரை ஒரு ரவுண்ட் அப்!
CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Amit shah Slams Arvind Kejriwal | பாஜகவின் அடுத்த பிரதமர்?பகீர் கிளப்பிய கெஜ்ரிவால் அமித்ஷா பதிலடிActor Ranjith | ”ஜெயிக்கலனா வரவே வராதனு சொல்லிட்டாரு” கண்கலங்கி பேசிய ரஞ்சித்Annamalai | Raghava Lawrence gifted tractors to farmers | விவசாயிகளுக்கு பிரியாணி விருந்து - லாரன்ஸ் சர்ப்ரைஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs RR LIVE Score: மீண்டும் டாஸ் தோற்ற ருதுராஜ்; பேட்டிங் செய்ய களமிறங்கும் ராஜஸ்தான்!
CSK vs RR LIVE Score: மீண்டும் டாஸ் தோற்ற ருதுராஜ்; பேட்டிங் செய்ய களமிறங்கும் ராஜஸ்தான்!
"சர்ப்ரைஸ் காத்திருக்கு.. மைதானத்தில் காத்திருங்க" ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள்!
TN Headlines: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! பல மாவட்டங்களில் கனமழை - இதுவரை ஒரு ரவுண்ட் அப்!
TN Headlines: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! பல மாவட்டங்களில் கனமழை - இதுவரை ஒரு ரவுண்ட் அப்!
CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
TN Weather Update: பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Virat Kohli: முக்கிய சாதனையை இன்று எட்டி பறிக்கப்போகும் விராட் கோலி.. முதல் வீரர் இவர்தானாம்..!
முக்கிய சாதனையை இன்று எட்டி பறிக்கப்போகும் விராட் கோலி.. முதல் வீரர் இவர்தானாம்..!
Breaking News LIVE: ராகுல் காந்தியின் வயதைவிட குறைவான சீட்டுக்களைத்தான் காங்கிரஸ் ஜெயிக்கும் - மோடி
ராகுல் காந்தியின் வயதைவிட குறைவான சீட்டுக்களைத்தான் காங்கிரஸ் ஜெயிக்கும் - மோடி
Anu Mohan: 2024-ஆம் ஆண்டில் உலகளவில் காத்திருக்கும் பேரழிவு..குண்டை தூக்கிப்போடும் அனுமோகன்
2024-ஆம் ஆண்டில் உலகளவில் காத்திருக்கும் பேரழிவு..குண்டை தூக்கிப்போடும் அனுமோகன்
Embed widget