அமைச்சர் மஸ்தான் பதவி பறிப்பா..? மீண்டும் அமைச்சராகும் நாசர்... மீண்டும் அமைச்சரவை மாற்றமா ?
திண்டிவனத்தை சேர்ந்த கவுன்சிலர்கள் 17 பேர் முதல்வரிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவியை மாற்ற வேண்டுமென புகார்.
![அமைச்சர் மஸ்தான் பதவி பறிப்பா..? மீண்டும் அமைச்சராகும் நாசர்... மீண்டும் அமைச்சரவை மாற்றமா ? Will Minister Masthan lose his post Nasser will be a minister again Cabinet change again TNN அமைச்சர் மஸ்தான் பதவி பறிப்பா..? மீண்டும் அமைச்சராகும் நாசர்... மீண்டும் அமைச்சரவை மாற்றமா ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/02/41860d1459ec132b7fdb828c0501137e1690970240088113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் செஞ்சி மஸ்தான். செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செஞ்சி மஸ்தானுக்கு சட்ட மன்றத்தில் முதன்முறையாக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை உருவாக்கப்பட்டு அதனை மஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த மே மாதம் 13ம் தேதி மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் திண்டிவனம் நகராட்சி 20வது திமுக பெண் நகர மன்ற உறுப்பினராக உள்ள ரம்யாவின் கணவர் மருவூர் ராஜா, பிரபல சாராய வியாபாரியான இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மருவூர் ராஜா இருக்கும் படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமைச்சரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பல ஆண்டுகள் இருப்பதாகவும் தவறான நபர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் தான் அமைச்சர் மஸ்தானின் தம்பியான "காஜா நஜீர்" நகர செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. மேலும், மஸ்தான் அமைச்சரானதும் செஞ்சி பேரூராட்சி தலைவராக தனது மகன் மொக்தியார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் கட்சி ரீதியாக விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளராகவும் உள்ளார். மேலும் அமைச்சரின் மருமகன் ரிஸ்வான் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். அமைச்சர் மஸ்தானின் தம்பி "காஜா நஜீர்" கடந்த 15 ஆண்டுகளாக செஞ்சி பேரூர் கழக செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவரை பதவியில் இருந்து நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். செஞ்சியின் புதிய நகர செயலாளராக செஞ்சி பேரூராட்சி 5வது வார்டு உறுப்பினர் கார்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் திண்டிவனம் நகராட்சியில் தொடர்ந்து டெண்டர் உட்பட பல்வேறு விவகாரங்களில் அமைச்சர் செந்தில் மஸ்தான் அவரது மருமகன் ரிஸ்வான் தலையீடு அதிகமாக இருப்பதால் திண்டிவனம் திமுக இரண்டாக பிளந்தது, இதில் ஒரு தரப்பு அமைச்சர் பொன்முடியின் பக்கம் சென்றனர். இதனால் திண்டிவனம் திமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து திண்டிவனம் நகராட்சி நிர்வாகம் எந்தவித மக்கள் பணியும் மேற்கொள்ளவில்லை நகர மன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர் அதற்கு நகராட்சி சேர்மன் மற்றும் நகராட்சி ஆணையர் எந்த அளிக்காததால் வாக்குவாதம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் மஸ்தான் தலைமையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் தொடங்கியது அதில் திமுகவின் முன்னணி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என வாக்குவாதம் நடைபெற்றது. இதில் ஒருவர் "பொருளே இல்லை எனக்கு எதுக்கு பொருளாளர் பதவி" எனக்கு கடுமையாக பேசி அமைச்சர் மஸ்தானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ABP நாடுக்கு கிடைத்த தகவலில், முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மூன்றாவது முறையாக மாற்றம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் பதவி பறிக்கப்பட்டு நாசருக்கு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் இரண்டு முறை மாற்றம் நிகழ்ந்த போது சிலரின் துறையில் மாற்றப்பட்டது. யாருடைய பதவி பறிக்கப்படவில்லை. ஆனால் மூன்றாவதாக அமைச்சரவை மாற்றத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் பதவியை பறித்தார். அதற்கு பின்னர் அதற்கான சரியான விளக்கங்களும் சொல்லப்பட்டனர் சொந்த கட்சியினர் மீது நாற்காலி எங்கே என கல் தூக்கி வீசியது தொடங்கி ஆவின் நிர்வாகத்தில் குளறுபடிகள் மற்றும் அதிகாரிகளுடன் இணக்கமாக செயல்படவில்லை எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தலைமைக்கு சொல்லப்பட்டது.
மேலும், நாசர் மகன் அசிம் ராஜா மீதும் திருவள்ளுவர் திமுகவினர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த பின்னணியில் தான் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் திண்டிவனம் ,செஞ்சி மயிலம், மரக்காணம் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக மொத்தமும் அமைச்சர் மஸ்தான் மீது கொந்தளிப்பில் உள்ளனர். மேலும் செஞ்சி மஸ்தான் கட்சிக்காரர்கள் என்று பொதுவாக பார்க்காமல் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மட்டுமே பதவிகள் கொடுப்பது, டெண்டர் ஒதுக்குவது என ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து திண்டிவனத்தை சேர்ந்த கவுன்சிலர்கள் 17 பேர் முதல்வரிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மாவட்ட செயலாளர் பதவியை மாற்ற வேண்டுமென புகார் அளித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)