மேலும் அறிய

மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம் - தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தடையில்லா சான்று பெற ஆலோசனைக் கூட்டம்

மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தடையில்லா சான்று பெறுவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

அழகன்குப்பம் கிராமத்தில், மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தடையில்லா சான்று பெறுவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில், மரக்காணம் வட்டம், அழகன்குப்பம் கிராமத்தில், மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடர்பாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தடையில்லா சான்று பெறுவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  மோகன் அவர்கள் தலைமையில் (19.12.2022) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில் 40 கி.மீ கடற்கரை ஒட்டிய பகுதிகள் உள்ளது. இக்கடற்கரை ஒட்டிய பகுதிகளில் 19 மீனவ கிராமங்கள் உள்ளது. இம்மீனவ கிராமங்களில் 14,935 மக்கள் வசித்து வருகின்றனர். 1541 சாதாரண மீன்பிடி படகுகளும், 34 இயந்திர மீன் படகுகளை கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் மேன்மைக்காக தமிழக அரசின் சார்பில், கழுவெளி ஆற்று நீரை அடிப்படையாக கொண்டு செங்கல்பட்டு மாவட்டம், அலம்பறை குப்பத்திலும், மரக்காணம் வட்டம் அழகன் குப்பத்திலும் மீன்பிடி துறை ரூ.235 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கப்படவுள்ளது.

எவ்வித இயற்கைக்கும் இடையூறு ஏற்படாத வகையில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம், மீனவர்கள் ஆழ்கடல் சென்று மீன்பிடித்திடவும், பிடித்த மீன்களை எளிதில் தங்கள் இடத்திற்கு கொண்டு வரவும், மீன்கள் தேவைப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்திட வழிவகை ஏற்பட்டுள்ளது. இவற்றின் மூலம், மீனவர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பும் கிடைத்திடவும், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் உயர வழிவகை ஏற்படுத்தப்படவுள்ளது. மீன்பிடி துறைமுகத்தில், படகுகள் நிறுத்துமிடம், வலை கட்டுமிடம், வலை உலர்த்துமிடம், படகுகள் பழுது நீக்குமிடம், நிர்வாக கட்டிடம், ஓய்வறை, குளிர்சாதன வசதியுடன் கூடிய மீன்கள் பதப்படுத்துமிடம், கழிப்பறை வசதி, சாலை வசதி, பாதுகாப்பு அறை, சுற்றுச்சுவர், திடக்கழிவு மேலாண்மை திட்டத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

எனவே, இத்திட்டத்தினை விரைந்து செயல்படுத்திடும் வகையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தடையில்லா சான்று பெறுவதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர்  மோகன் அவர்கள் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை)  சித்ரா விஜயன், திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா, மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், மீன்வளத்துறை உதவி இயக்குநர்  அ.நித்தியபிரியதர்ஷினி, மாசுகட்டுப்பாட்டு வாரிய மண்டல பொறியாளர் .செல்வகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் இயற்கைக்கும் இடையூறு ஏற்படாத வகையில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு மீனவர்கள் பயன்பாடிற்கு கொண்டுவரப்படும் என கூறியுள்ளார்.

உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget