மேலும் அறிய

மரக்காணம் அருகே வலுவிழந்த ஏரிக்கரையில் நடப்பட்ட மின்கம்பம் - உயிர் சேதம் ஏற்படும் அபாயம்

விழுப்புரம்: மரக்காணம் அருகே முருக்கேரி கிராமத்தில் வலுவிழந்து ஏரிக்கரையில் மின்கம்பம் நடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி

விழுப்புரம்: மரக்காணம் அருகே வலுவிழந்த ஏரிக்கரையில் நடப்பட்ட மின்கம்பத்தால் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
வலுவிழந்த ஏரிக்கரை:

விழுப்புரம் மாவட்டம்  பிரம்மதேசம் அருகே சிறுவாடி முருக்கேரி கிராமத்தில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழைக்காலத்தில் தேக்கி வைக்கப்படும் நீரை பயன்படுத்தி அப்பகுதி விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயம்  செய்து வந்தனர். அதுமட்டுமின்றி அந்த கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு இந்த ஏரி பயனுள்ளதாக இருந்தது. ஆண்டுகள் உருண்டோடியும், ஏரியை பராமரிக்கவில்லை. மேலும் ஏறி தூர்வாரப்படாததாலும் ஏரி முழுவதும் புதர் மண்டியும், முட்செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. ஏரியில் உள்ள மதகுகளும், கலிங்கல்லும் சேதமடைந்துள்ளது.

இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. மழையையும், ஏரியையும் நம்பி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்கிறார்கள். ஆனால் பயிர் அறுவடைக்கு முந்தைய காலத்தில் போதிய தண்ணீர் கிடைக்காமல் கருகிவிடுகின்றன. இதனால் ஆண்டுதோறும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள், அதுமட்டுமின்றி அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. ஏரியின் கரைகளும் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது.

மின்கம்பத்தால் உயிர் சேதம் ஏற்படும் அபாயம்:

தற்போது ஏரியை குப்பை கொட்டும் இடமாகவும், இயற்கை உபாதை கழிக்கும் இடமாகவும் மாற்றி வருகிறார்கள்.  இந்த நிலையில் தற்போது ஏரிக்கரை வலுவிழந்து இருக்கும் சூழ்நிலையில் உடையும் நிலையில் காணப்படும் மதகு அருகே ஏரிக்கரை பகுதியில் மேட்டை உடைத்து அதற்கு மேல் நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக தனியார் திருமண மண்டபம் அருகே இருந்த மின்மாற்றியை மாற்றி அமைப்பதற்காக மின்கம்பங்கள் நடும் பணியில் சாலை விரிவாக்க ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எந்த ஒரு ஆய்வு செய்யாமல் வலுவிழந்த ஏரிக்கரையில் மின் கம்பங்கள் நடப்பட்டது விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, மேலும் இது சம்பந்தமாக கிராமத்தை சேர்ந்த வருவாய் வருவாய்த் துறையினருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் மின்கம்பங்களை நட்டுள்ளனர், வரும் காலம் மழைக்காலம் என்பதனால் வலுவிழந்து ஏரிக்கரையில் நடப்பட்ட மின்கம்பம் சரிந்து உயிர் சேதங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால் உடனடியாக அந்த மின்கம்பதை அகற்ற விவசாயிகள் மற்றும் அக்கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Hyderabad hijab issue | ”ஹிஜாப்பை கழட்டு” பாஜக வேட்பாளர் அடாவடி! வாக்குச்சாவடியில் வன்மம்Ramdoss : மோடியின் சர்ச்சை பேச்சு எஸ்கேப்பான ராமதாஸ் முஸ்லீம் குறித்து பேசியது சரியா?Pondichery : பாண்டிச்சேரியில் 1 நாள்...150 ரூபாய் PACKAGE இத்தனை இடங்களா?Felix Gerald Arrest :  கணவரை தேடிய மனைவி போலீஸ் வேனில் Felix திடீர் திருப்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Rahul Gandhi Marriage : எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
எப்போ கல்யாணம் பண்ணிப்பீங்க?: கூட்டத்தில் இருந்து வந்த பெண் குரல்.. ராகுல் சொன்ன பதில்!
Watch Video: இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் அத்துமீறல்.. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு.. என்ன நடந்தது..?
Embed widget