மேலும் அறிய

இரண்டு நாளில் விழுப்புரம் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் - முதன்மை செயலர் அமுதா

ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணமாக ரூ.2000 மற்றும் 5 கிலோ அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்படும்.

விழுப்புரம்: ஃபெஞ்சல் பாதிப்பிலிருந்து விழுப்புரம் மாவட்டம் இரண்டு தினங்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என வருவாய் மற்றும் பேரிடல் மேலாணமை முதன்மை செயலர் அமுதா தெரிவித்துள்ளார். 

விழுப்புரம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களாக ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஐந்து கிலோ அரிசி அரசு சார்பில் வழங்கப்படுவதால் அதனை பேக்கிங்க் செய்யும் பணியையும் பொருளின் தரம் நிகர எடை குறித்து ஆய்வு செய்தனர்.
 
அதனை தொடர்ந்து பேட்டியளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலர் அமுதா, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் விரைந்து நடைபெறுவதால் இரண்டு நாட்களில் முழுமையாக விழுப்புரம் மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் நிவாரண பணிகள் வழங்குவது இரண்டு அல்லது மூன்று நாட்களில் பாதிக்கபட்ட மக்களுக்கு சென்றடையும் என தெரிவித்தார்.

ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணமாக ரூ.2000 மற்றும் 5 கிலோ அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கிட அறிவுறுத்தப்பட்டு விழுப்புரம் மாவட்டத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றைய தினம் முதல் பெஞ்சல் புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணத் தொகை ரூ.2000 மற்றும் 5 கிலோ அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம், அனைத்து நியாய விலைக்கடைகள் மூலமாக நிவாரணத்தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கிடும் வகையில் உறுதிச்சீட்டு (டோக்கன்) வழங்கப்பட்டு வருகிறது.

நியாய விலைக்கடைகளில் நிவாரணப்பொருட்கள் வழங்குவதற்காக 5 கிலோ அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் பாக்கெட் செய்து நியாய விலைக்கடைகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், வி.சாலை, திண்டிவனம், செஞ்சி, வானூர் மற்றும் கண்டாச்சிபுரம் ஆகிய 6 சேமிப்பு கிடங்குகளில் வெளிமாவட்டங்களிலிருந்து மண்டல மேலாளர்கள்; நியமிக்கப்பட்டு அவர்கள் மேற்பார்வையில் நிவாரணப்பொருட்கள் பாக்கெட் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒரு நாளைக்கு 6 கிடங்குகளில் சுமார் 40000 பாக்கெட்கள் என்ற அளவில் பாக்கெட் செய்யப்பட்டு வருகிறது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் பாக்கெட் செய்யும் பணிகள் முடிக்கப்பட்டு நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வழங்கிடும் வகையில் மின்பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கான மின் இணைப்பு  வழங்குவதற்காக மின் பாதிப்புகள் சரிசெய்யும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஒரிரு நாட்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.

பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால், உணவுகள் சமைத்து வழங்கப்படுவது குறைந்துள்ளது. நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 17000 உணவுப்பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை உணவு 9000 காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், எந்தெந்த பகுதிகளில் இயல்புநிலை திரும்பாமல் மக்கள் தங்களுக்கு உணவு தேவைப்படுகிறது என்கிறார்களோ அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உணவு தயாரித்து வழங்கப்படும் என அரசு முதன்மைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமுதா தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலைThirumavalavan | ”ஆதவ் கட்டுப்பாட்டில் நானா?திமுகவை பார்த்தால் பயமா?” திருமா ஒப்புதல் வாக்குமூலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
மல்லுக்கட்டும் ஐபிஎஸ் வருண்குமார் - சீமான்: அண்ணாமலை வைத்த வேண்டுகோள்! பரபரப்பில் அரசியல் களம்! 
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Senthilbalaji : “அதானி பற்றி அப்படி சொன்னால் அவ்ளோதான்” எச்சரித்த அமைச்சர் செந்தில்பாலாஜி..!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Job Fair: 10,000+ பணியிடங்கள்‌; 100+ நிறுவனங்கள்.. இளைஞர்களே உங்களுக்குதான் இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
Instagram Down: முடங்கிய இன்ஸ்டாகிராம்: மெசேஜ் பண்ண முடியாமல் தவிக்கும் பயனாளர்கள்! காரணம் என்ன? 
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
விஜயுடன் முரண்பாடா? திமுகவுக்காக அம்பேத்கரை விட்டாரா திருமா? - அறிவாலயத்தில் இருந்து வந்த தகவல்!
TNPSC Group 2 Result 2024: தேர்வர்களே… குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது இதுதான்!
TNPSC Group 2 Result 2024: தேர்வர்களே… குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் சொன்னது இதுதான்!
Embed widget