மேலும் அறிய

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் 129-வது பிறந்தநாள் - விழுப்புரம் ஆட்சியர் மரியாதை

ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் அவர்களின் 129-வது பிறந்தநாளையொட்டி, ஓமந்தூர் அரசு மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை.

ஓமந்தூரில், சென்னை மாகாணம் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் அவர்களின் 129-வது பிறந்தநாளையொட்டி, ஓமந்தூர் அரசு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள்  மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் ஓமந்தூரில், சென்னை மாகாணம் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் அவர்களின் 129-வது பிறந்தநாளையொட்டி, ஓமந்தூர் அரசு மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர்  மோகன் மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  

பின்னர் மாவட்ட ஆட்சியர்  கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தேசத்திற்காக பாடுபட்ட உயிர்நீத்த தியாகிகளின் தியாகத்தினை போற்றும் விதமாகவும், தியாகத்தினை நினைவு கூறும் விதமாகவும் மாவட்டங்களில் அவர்களின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சிகள் அமைத்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட உத்தரவிட்டிருந்தார். மேலும், சுதந்திர போராட்ட தியாகிகளின் பிறந்த நாளினை சிறப்பாக கொண்டாடிடவும் அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், சென்னை மாகாணம் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் 129-வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திண்டிவனம் வட்டம், ஓமந்தூர் கிராமத்தில் 1895ஆம் ஆண்டு பிறந்த ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் அவர்கள் சட்டம் பயின்று இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக 1947 முதல் 1949 வரை பதவி வகித்தார்.

விவசாயிகள் மற்றும் ஏழை, எளியோர் முன்னேற்றத்திற்காக சிந்தித்து உழைப்பு, நேர்மை, கண்டிப்பு கட்டுப்பாடு, விவசாயத்தில் ஆர்வம், சிக்கனம், சன்மார்க்கம், நீதி தவறாமை ஆகிய குறிக்கோளுடன் ஆட்சி நடத்தியவர் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என கருதியவர். எதையும் வெளிப்படையாகப் பேசும் துணிச்சல் மிக்கவர், சிறந்த எழுத்தாளர், சமூக சேவகர், நேர்மையும் துணிச்சலும் மிக்க கறைபடாத அரசியல்வாதியாகப் போற்றப்படும் இவர் 1970-ம் ஆண்டில் தனது 75-வது வயதில் காலமானார். தமிழக அரசு இவரது நினைவாக சொந்த ஊரான ஓமந்தூரில் மணிமண்டபம் அமைத்துள்ளது. தமிழ்நாடு அரசு அன்னாரது நினைவாக தபால் தலையும் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம், ஓமந்தூரில் சென்னை மாகாணம் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் அவர்களின் 129-வது பிறந்தநாளையொட்டி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது” என தெரிவித்தார்.

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
Embed widget