Manipur Violence: மணிப்பூர் கலவரம் பற்றி கவலையில்லை, வெளிநாடு பயணமே முக்கியம்.. பிரதமரை விமர்சித்த அமைச்சர் பொன்முடி!
மணிப்பூர் கலவரம் குறித்து கவலைபடாமல் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் என அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் : மணிப்பூரில் சனாதன ஆட்சி நடைபெறுவதால் பெண்கள் துன்புறுத்தப்படுவதாகவும் கலவரத்தை கட்டுபடுத்த மணிப்பூர் அரசு தவறிவிட்டதாகவும் கலவரம் நடப்பது குறித்து கவலைபடாமல் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் என அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுக மகளிர் அமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு தமிழக அரசுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி தரும் வகையில் செயல்படுவதையும், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை விசாரனை என்ற பெயரில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. மணிப்பூர் கலவரத்தில் பூர்வகுடி பழங்குடி பெண்கள் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்று கூட்டு பாலியலில் ஈடுபட்டதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நாளை விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இச்சம்பவத்தை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் திராள கலந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டன.
அதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுபடுத்த மாநில அரசு தவறிவிட்டதாகவும் கலவரம் நடப்பது குறித்து கவலைபடாமல் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார் என குற்றஞ்சாட்டினார். அனைவரும் சமம் என்பதை தான் உணர்த்து வகையில் திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிற நிலையில் மணிப்பூரில் சனாதான ஆட்சி நடைபெறுவதால் பெண்கள் துன்புறுத்தப்படுவதாகவும் பாராளுமன்றத்திற்கே வராமல் ஊடகங்களை சந்திக்கும் பிரதமராக மோடி உள்ளார் என கூறினார்.
பொறுப்பில்லாமல் செயல்படும் மணிப்பூர் மாநில முதல்வர் பிரதமரின் கண்களை திறப்பதற்காக தமிழகம் முழுவதும் நாளை மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெறுவதாக கூறினார். மகளிர் மீது அக்கறை உள்ள அனைவரும் மணிப்பூர் பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட வேண்டும் அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்