வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு! சிறப்பு முகாம் இன்று!
வாக்காளர்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை சம்மந்தப்பட்ட வருவாய் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்கு சாவடி மையங்களில் வரும் 18ம் தேதி வரை வழங்கலாம்

விழுப்புரம் : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆய்வுக்கூட்டம் வாக்காளர் பட்டியல் மேற்பார்வை அலுவலர் மோகன்., மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் தஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆய்வுக்கூட்டம நடைபெற்றது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு ஆய்வு கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விழுப்புரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வை அலுவலர் மோகன் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வை அலுவலர்/ புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் மோகன்., தெரிவிக்கையில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படியும், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவுரையின் படியும், 01.01.2026 ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வருவதை தொடர்ந்து, 19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்கு சாவடி மையங்களில் வரும் 18.01.2026 அன்று வரை வழங்கலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட 2166 வாக்கு சாவடி மையங்கள் (Polling Station) அமைந்துள்ள 1138 வாக்கு சாவடி நிலை அமைவிடங்களில் (Polling station location) எதிர்வரும் 27.12.2025 (சனி) 28.12.2025 (ஞாயிறு) மற்றும் 03.01.2026 (சனி), 04.01.2026 (ஞாயிறு) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த வாரம் 27.12.2025 (சனி) மற்றும் 28.12.2025 (ஞாயிறு) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து, இன்றையதினம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாம் நடைபெற்றததோடு, (04.01.2026) ஞாயிறு நடைபெறுகிறது.
இச்சிறப்பு முகாமில் 18 வயது பூர்த்தியடைந்த தகுதியான வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் தேவைப்படும் வாக்காளர்கள் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெறாமல் உள்ள தகுதியான வாக்காளர் அனைவரும் தங்கள் கோரிக்கை மனுக்களை மேற்கண்ட நாட்களில் தங்கள் பகுதியிலுள்ள வாக்கு சாவடி மையங்களுக்கு சென்று தகுந்த படிவங்களை பெற்று, பூர்த்திசெய்து வாக்குச் சாவடி நிலைய அலுவலர்களிடம் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் (https://voters.eci.gov.in/) பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர்களாக பதிவு செய்திட விழுப்புரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வை அலுவலர் மோகன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, விழுப்புரம் மருத்துவமனை வீதியில் உள்ள விழுப்புரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.





















