மேலும் அறிய

GST : ஜிஎஸ்டி வரி விதிப்பு ஒரே வரி விதிப்பாக இருக்க வேண்டும் - வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா

மத்திய அரசு நடப்பாண்டு  பட்ஜெட்டில் தனி நபர் வருமானம் 5 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்த்த வேண்டும் - விக்கிரமராஜா

விழுப்புரம் : மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமானம் 5 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் ஜிஎஸ்டி வரி 10 சதவிகிதத்திற்கு மேல் இருக்ககூடாது ஒரே வரி விதிப்பாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மே 5ம் தேதி மதுரையில் மாநாடு நடைபெறுவதால், விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியில் புதிய நிர்வாகிகள் கூட்டம் மற்றும் அரசூர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புதிய கிளையினை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து விழாவில் பேசிய விக்கிரமராஜா,... சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள், இந்திய நாடு விவசாயத்தையும், வணிகர்களையும் சார்ந்த நாடு, ஆனால் தற்போது கலாச்சாரங்கள் மாறி வருகிறது, நெற்பயிர்கள் இருந்த இடங்கள் எல்லாம் கட்டிடங்களாக மாறிக்கொண்டிருக்கின்றது, சாமானிய வணிகர்களை எல்லாம்,அப்புறப்படுத்தி ஆன்லைன், கார்ப்பரேட் வணிகம் என்று போய்க்கொண்டு இருக்கின்றது, இதற்காக தான் பிரதமரும்,முதலைச்சரும், சாமானிய வணிகர்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க, அரசு சிறப்பு பாதுகாப்பு சட்டம்,ஒன்றை இயற்றப்பட வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கையாக வைக்கின்றது, இதுதான் காலத்தின் கட்டாயம், மத்திய அமைச்சர் பியஸ் கோயலுடன் பேசும்போது, தமிழ்நாட்டில், 10 லட்சம் வணிகர்கள் என்று கூறினோம், ஆனால் அவர் இந்திய முழுவதும் கணக்கிட்டு, 10 கோடி வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் புள்ளி விவரம் தந்துள்ளார், கொரோனா காலத்தில் உணவு கொடுத்தவர்கள்.

நம்முடைய சாமானிய வணிகர்கள் என்பதை எல்லோரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், உள்நாட்டு வணிகர்களை பாதுகாப்போம், வருகின்ற 42 ஆவது வணிகர் சங்க மாநில மாநாடு செங்கல்பட்டு அருகில் மதுராந்தகம் ஜி.எஸ்.டி சாலை பகுதியில் 57 ஏக்கரில் மாநாட்டு பணி தொடங்கி இருக்கின்றது, தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்க்கொண்டு வருகின்றோம், மேலும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி அனைத்து அரசியல் கட்சிகளும் காய்நகர்த்தி கொண்டிருக்கின்றது, ஆகவே நம்முடைய வாக்கு என்பது பெரும்புள்ளி வாக்கு, யாரை ஆட்சியில் அமரவைக்க வேண்டுமோ, நாம் சிந்தித்து செயல்பட்டால் அவர்கள் தான் ஆட்சியில் அமரமுடியும், யாரை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று என்னுகிறோமோ, நாம் சிந்தித்து செயல்பட்டால், அவர்களை அகற்ற முடியும், நம்முடைய நிலைபாட்டை வணிகர் சங்க பெண்களும் எடுத்துக்கொண்டால், நம்முடைய கோரிக்கைகளை, மத்திய, மாநில அரசிடம் சென்று கெஞ்ச வேண்டிய நிலை இருக்காது, அவர்களே நம்மிடம் முன் வந்து,உங்களுக்கு என்ன தேவைகள் வேண்டும் என சொல்லுவார்கள், சொல்லக்கூடிய வாய்ப்பை, அனைவரும் உருவாக்க வேண்டும் என பேசினார்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த விக்கிரமராஜா.,

மத்திய அரசு நடப்பாண்டு  பட்ஜெட்டில் தனி நபர் வருமானம் 5 லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் ஜி எஸ் டி வரி 10 சதவிகிதத்திற்கு மேல் இருக்ககூடாது, ஒரே வரி விதிப்பாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும் வணிகர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 ஆயிரம் போடாமல் 1 லட்சம் வரை போடுவது கூடாது என தெரிவித்தார். பீடி சிகரெட் விற்பனை செய்யும் அதனை மொத்தமாக காவல் துறை பறிமுதல் செய்வதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். பெஞ்சல் பாதித்தபோது மத்திய அரசும் மாநில அரசும் வணிகர்களுக்கு  இழப்பீடு வழங்கவில்லை என குற்றஞ்சாட்டினார். வியாபாரிகளை பாதுகாக்க மாநில அரசும் மத்திய தயங்குவதாக குற்றஞ்சாட்டினார்.

விழாவில் அரசூர் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் அனிதா சௌந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
2 முதலமைச்சர்களை கொடுத்தது தேனி.! நேக்கா ஓபிஎஸ்-ஐ கழட்டிய இபிஎஸ்.! 3 முதல்வர்தானே.!
TN Rain: சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க.! இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை இருக்கு..!
சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க.! இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை இருக்கு..!
திருமா சொன்னதை முதல்வர் ஸ்டாலினுக்கு Dedicate செய்கிறேன் - நக்கலடித்த செல்லூர் ராஜூ
திருமா சொன்னதை முதல்வர் ஸ்டாலினுக்கு Dedicate செய்கிறேன் - நக்கலடித்த செல்லூர் ராஜூ
மனு கொடுத்தா.. உங்களுக்கு பிச்சை கேக்குறா மாறி இருக்கா? பாஜக அமைச்சரை பொளக்கும் மக்கள்
மனு கொடுத்தா.. உங்களுக்கு பிச்சை கேக்குறா மாறி இருக்கா? பாஜக அமைச்சரை பொளக்கும் மக்கள்
Embed widget