பிஞ்சு நெஞ்சில் நஞ்சு... சாதி பெயரால் ஆறாம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்! போலீசார் விசாரணை!
திண்டிவனம் அருகே 6 ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுவனை நெருப்பில் தள்ளி கொள்ள முயன்றதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம்: வெள்ளிமேடு பேட்டை அருகே சாதிப் பெயரைச் சொல்லி ஆறாம் வகுப்பு மாணவனை தீயில் தள்ளிய சம்பவம் அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு பேட்டை அடுத்த காட்டுச்சிவிரி கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் சுந்தர்ராஜ். இவர் காட்டுச்சிவிரி அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சுந்தர்ராஜ் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சக மாணவர்கள் சாதி பெயரை சொல்லி அழைத்து அவமானம் செய்ததாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து சுந்தர்ராஜன் தந்தை கன்னியப்பன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் நேற்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பொழுது சுந்தர்ராஜனை “வாடா வில்லி பையா” எனக்கூறி மூன்று பேர் நெருப்பில் தள்ளி விட்டுள்ளனர். தீயின் வலியை தாங்க முடியாமல் சுந்தரராஜன் அருகிலிருந்த தண்ணீர் டேங்கில் தனது உடலை நினைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் தனது அம்மாவிடம் நடந்தவற்றை சுந்தரராஜன் கண்ணீருடன் கூறியுள்ளார்.
#விழுப்புரம் அருகே ஆறாம் வகுப்பு மாணவனை சாதிப்பெயரை சொல்லி தீயில் தள்ளிய சகமாணவர்கள்....@abpnadu @SRajaJourno pic.twitter.com/ygkodTRcei
— SIVARANJITH (@Sivaranjithsiva) May 10, 2022
உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மணம்பூண்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் சுந்தர்ராஜன் தந்தை வந்தவுடன் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளனர். மேலும் தீக்காயங்கள் அதிகமாக இருந்ததால் சுந்தரராஜனின் தந்தை கன்னியப்பன் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சாதி பெயரை சொல்லி திட்டியும், தீயில் தள்ளி தள்ளி விட்டதால் இதனை செய்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டுமென வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கன்னியப்பன் அளித்த புகாரின் பேரில் வெள்ளிமேடு பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்